பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

175


போனோம். வி.ஆர்.எஸ். மெய்யப்பன் திறமையான வழக்கறிஞர் மட்டுமல்ல. நம்பால் பெரிதும் பற்றுடையவர். நம்முடைய சிறந்த ஆலோசகளில் ஒருவர். இரவு 12 மணி. ஆரவாரம் அடங்கியிருந்தது. நமது தரப்பினரை எழுப்பி ஊருக்கு வெளியே கொணர்ந்து நிலைமை விசாரித்து அறியப் பெற்றது. முடிவு என்ன?

கொடிக்கம்பம் இருந்த இடம், தையற்கடை உரிமையாளர் மணி என்பவரின் கடைமுன். அது அவருடைய சொந்த இடம். அவர் தனது சொந்த இடத்தில் திராவிடர் கழகக் கொடியை அமைக்க விரும்பவில்லை என்று எழுதிக் காவல் நிலையத்தில் கொடுத்துப் பாதுகாப்புக் கேட்பது என்று முடிவு. காவல் நிலையத்துக்குச் சென்று ஆய்வாளரை எழுப்பி, மணி கொடுத்த மனுவுடன் நமது சார்பிலும் ஒரு மனுவை வழக்கறிஞர் தயாரித்துக் கொடுத்தார். ஒருவழியாக அன்று விவகாரம் ஒரு முடிவுக்கு வந்தது.

திராவிடர் கழகத்தினரின் வேகம் அடங்கவில்லை. பரவலாகக் கிளர்ச்சி செய்தனர். நம் தரப்பிலும் கிளர்ச்சி செய்யப்பெற்றது. திருப்பெருந்துறையில் திருவாசக விழா தொடங்கப்பெற்றது.

மற்ற நூல்களுக்கு இல்லாத ஒரு பெருமை திருவாசகத்துக்கு உண்டு. அது என்ன? திருவாசகத்தைப் பூசை செய்து ஒதினால் சிவபூசை செய்ததற்கு ஒப்பு என்ற மரபு உண்டு. திருவாசகத்தின் அருமை கருதி, காரைக்குடியில் திருவாசக மடம் கட்டித் திருவாசகம் ஒத ஏற்பாடு செய்தனர். ஆண்டு தோறும் 'திருவாசக விழா' நடத்தி வருகின்றனர்.

திருவாசகர் தோன்றிய திருப்பெருந் துறையில் அரிமழம் அரு. அ. அண்ணாமலை செட்டியார் திருவாசக மடம் அமைத்துத் திருவாசகம் படிக்கவும் ஒதவும் ஏற்பாடு செய்துள்ளார். 1953-ம் ஆண்டு திருவாசக விழா, திருவாத ஆரில் முதலில் தொடங்கப்பெற்றது. மதுரை அருள்மிகு