பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

ஏற்புடையதாகக் கவிதை மலர்ந்து மணம் பரப்புகின்றது! சட்டமேலவை உறுப்பினர் பொறுப்பினை ஏற்று முத்தமிழறிஞர் கலைஞருக்கு நன்றி தெரிவிக்கும் கவிதை ஒரு வரலாற்றுப் பெட்டகம்! தம்முடைய 'நெஞ்சுக்கு நீதி வரலாற்று நூலில் முத்தமிழறிஞர் கலைஞர், அடிகள் பெருமான் கவிதையைப் பொன்னெழுத்துக்களில் பொறித்துப் போற்றியிருக்கின்றார்! அருள்நெறித் தந்தையின் மணிமண்டபத் திறப்பு விழாவில் கூட இக்கவிதையை முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு கூர்ந்தது குறிப்பிடத்தக்கது. ‘பரமகுரு வாழ்க!” என்ற கவிதை ஆதீனக் கவிஞர் மரு.பரமகுரு அவர்களின் உண்மையான தொண்டிற்கு, உறுதியான உழைப்பிற்கு, சலனப்படாத நேர்மைக்கு, சஞ்சலமில்லாத வாய்மைக்கு அளிக்கப்பட்ட நற்சான்று அணுக்கையானவர்களிடம் விரைவில் விடைபெறப் போகின்றோம் என்ற முன்னறிவிப்பு தம்மோடு தோளோடு தோள் கொடுத்துத் தம் பணியை நிறைவாய் பரமகுரு செய்திருக்கின்றார் என்ற நிறைவு தமிழய்யா கதிரேசனைப் பாராட்டிய வரிகள் அவரின் உண்மைத் தமிழ்த் தொண்டிற்கு அளிக்கப்பட்ட பாராட்டு நல்ல தோழமைக்கு இலக்கணமாய் விளங்கியது கபிலர் . பாரி நட்டாகும். முந்தி விடைபெற்றுவிட்ட பாரியை நோக்கி 'என்னைத் தனியே விட்டுச் சென்றாயே!” என்று கபிலர், மண்ணுலகில் பாரி விட்டுச் சென்ற கடமையை நிறைவேற்றி விட்டு விரைவில் செல்வார். அதுபோல் நம் அடிகள் பெருமான் தவத்திரு சுந்தர சுவாமிகளின் பிரிவின்போது பாடிய இரங்கற்பாவில் 'விரைவில் உனைத் தொடர்ந்து வருகின்றோம்!” என்று கூறிய வரிகளே வாழ்வில் உண்மையாகி விட்டது. தவத்திரு சுந்தர சுவாமிகள் மறைந்த சிறிது காலத்திலேயே நம் தவத் தந்தையும் மறைந்துவிட்டார்கள்! அடிகள் பெருமானின் கவிதைகள் சத்தியம் தாங்கிய கவிமாலை என்பதே உண்மையாகும்.

‘எங்கே போகிறோம்?’ என்ற கட்டுரைத் தொகுப்பு நூல் மதுரை வானொலி நிலையத்தில் ஒலிபரப்பான பல்வேறு துறைகளின் வளர்ச்சி, இலக்கியம், ஆன்மிகம், சமூக மேம்பாடு பற்றிய அற்புதச் சிந்தனைகளை உள்ளடக்கியதாகும். எங்கே போகிறோம்' என்று எழுப்பப்படுகின்ற வினாவே அற்புத வினா இது நாட்.ை நோக்கி, சமூகத்தை நோக்கிக் கேட்கின்ற வினா மனச்சாட்சியோடு நடுநிலையோடு கேட்கின்ற வினா "கால்நடை என்றால் என்ன" என்று அருகிலிருப்பவரைக் கேட்கிறார். காலால் நடக்கின்ற ஆடு. மாடுகள் என்று அவர் பதிலளிக்க, 'மனிதனும் காலால் தானே நடக்கின்றான். அவனுக்கு இந்தக் கால்நடை மருத்துவமனை பயன்படுமா என்று கேட்ட கேள்வியின் சிந்தனைக் கிளர்ச்சி, சிந்திக்க மறுக்கும் சமூகத்திற்குக் கொடுக்கின்ற சவுக்கடி! விடுதலை விழா என்றைக்கு ட்டு விழாவாகக் கொண்ட்ாடப்படும்?' என்று கேட்கும் கேள்வியில் 'வழக்கமான சடங்குகளின் விழாவாக - தீபாவ்ளி, பொங்கல் திருநாள்