பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

370

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வேண்டும். இதனால் நிலம், பெய்த மழைத் தண்ணீரைத் தன்பால் ஈர்த்து வைத்திருக்கும்.

அடுத்து வரும் வடமேற்குப் பருவ மழைக் காலத்தில் நடவு செய்யத்தக்க வகையில் கிணற்றுத் தண்ணீரைக் கொண்டு நாற்றுப் பாவி வைத்துக் கொள்ள வேண்டும்.

வடமேற்குப் பருவ மழை பெய்தவுடன் உழுத நிலத்தை ஒன்று அல்லது இரண்டு உழவில் சேறு கலக்கி நட்டு விட்டால் தண்ணீர்ப் பாசனம் இல்லாமலே மழை நீரிலேயே பயிரை வளர்த்து மகசூல் கண்டுவிடலாம்.

நாளுக்கு நாள் பருவ காலம் மாறி வருகிறது. மழையின் அளவும் குறைந்து வருகிறது. இந்தச் சூழ்நிலைகளையெல்லாம் கவனத்தில் கொண்டு விவசாயிகள் நடந்து கொண்டால்தான் வேளாண்மை அடிப்படையிலான பொருளாதாரத்தைப் பாதுகாக்க முடியும்.

ஆற்றில் தண்ணீர் வரட்டும், கண்மாயில் நீர் நிறையட்டும் என்பது இன்றைய சூழ்நிலைக்கு ஒத்து வராதது. அதோடு பெய்யும் மழைத் தண்ணீரைச் சொட்டு நீர்கூட வீணாகாமல் சேகரிக்கும் மனப்பான்மை தேவை.

நிலத்தில் புல், பூண்டு முளைத்து வளர்ந்து மூடியுள்ள இடங்கள் மழை நீரை மிக மந்த கதியில் தத்திச் செல்லும். காடு அடர்ந்த நிலத்து மண், தன்மேல் விழும் நீரைக் கடற் பஞ்சுபோல் உறிஞ்சித் தேக்கி நிறுத்திக் கொள்ளும்.

ஆதலால், நீர்ச் சேர்க்கை நிலப்பகுதி, நீர்ப் புரளி நிலப்பரப்பு, கண்மாய்கள், வாய்க்கால்கள், கண்மாய்க் கரைகள் முதலியவைகளில் மரங்களை வளர்ப்பது நல்லது. இந்த மரங்கள் தண்ணிரைக் குடித்துவிடும் என்ற அச்சம் தவறானது. 10 விழுக்காட்டுத் தண்ணீரைக் கூட மரம் குடிப்ப தில்லை.

அவை, பெய்யும் மழை நீரை நிலத்துக்குள் செலுத்தி நிலத்தடியில் நீரைத் தேக்கி வைத்து, கிணறுகளில் நீர்