பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நூல்களுக்கு அறிஞர்கள் வழங்கிய உரைகள்

453


வளவாழ்வுக்கு மூலகாரணம் தூய உள்ளம் என்பதையும், இவை போன்ற கருத்துக்களையும் இக்கட்டுரைகளில் காணலாம்.

தமிழ் நாட்டில் சமயத் துறையில் புதியதொரு பொலிவும் மறுமலர்ச்சியும் ஏற்பட்டுள்ளதைக் கண்டு அடிகள் உவகை கொள்கிறார்கள். பாண்டிய அரசன் இறைவன் திருக்கோயிலில் குடையை மடக்கிப் பணிந்த பழஞ் செய்தியையும், தேர்வண் மலையன், உழுத நோன்பகடு வைக்கோலைத் தின்றது போலப் பிறர் நலம் பேணி வாழ்ந்ததையும் தெரிவிக்கிறார்கள். சிவபிரான் திருக்கோயிலில் நந்தி யெம்பெருமாள் நிற்பதற்கு ஒரு புதிய உரை, அரிய உரை காணுகிறார்கள், ஆண்டவன் சந்நிதியில் நந்தியைக் காணும் போது, “ஏ மனிதனே! நீ மனிதன் என்று மார்தட்டாதே. பகுத்தறிவாளன் என்று பறை சாற்றாதே, பெருமிதங் கொள்ளாதே! இந்த எருதினுடைய-பிறர் நலம் கருதுகின்ற, உழைக்கின்ற உள்ளத்தை முதலில் பெறுவாயாக! அந்த உள்ளம் உனக்கு வந்துவிட்டதானால் சமய வாழ்க்கையில் இறைவனோடு தொடர்பு கொள்ளும் இன்ப வாழ்க்கையில் நுழைகின்றாய்” என்று அது சாற்றுகின்றதாம். அரிய தத்துவம் இது.

பாரிக்கு உவமை கூற வந்த கபிலர் எருக்கம்பூவையும் ஏற்கும் பரமனைக் கூறுவதையும் அன்பும் அருளும் பெறாதவர் நரக வாழ்க்கை பெறுவதையும், அறமல்லாதவற்றை மக்கள் விரும்பி ஒழுகுவதனால் நாடு வளம் குன்றுவதையும், அதனால் மழை பொய்ப்பதையும் எடுத்துக் காட்டுகிறார்கள். காணப்பட்ட உலகத்தைக் கொண்டு காணப்படாத கடவுளை அறியும் நெறியைத் தெளிவாக்குகிறார்கள்.

நம்முடைய முடிந்த முடிவான லட்சியமே ஜனநாயக வாழ்வுதான் என்று மயங்கிக் கிடக்கும் இன்றை உலகுக்கு