பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறவழிகாட்டி

181


நாட்டிலே பார்க்கமுடியும். என்றோ ஒரு காலத்தில் தமிழ்த் தாயின் வழியாக வள்ளுவரைப் படிக்கின்ற பேறு கிடைத்தது. அக்காரணத்தினாலே வள்ளுவர் புகழ்பாடுகின்ற பெருமை பெற்றவர்கள் அனைவரைப் பற்றிய நினைவும் எழுவது இயல்புதான்.

திருஞான சம்பந்தப் பெருந்தகையார் வெற்றிக் கொடி நாட்டிய மதுரையம்பதியிலே உலகத்தில் அன்பு நிலவ வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டு திருவள்ளுவர் கழகம் இருந்து பணி செய்கின்றது என்று நாமும் நினைத்துதான் இருந்தோம். எனவே உணர்ச்சியால் பழக்கம் இருந்தது அன்று; இன்று புணர்ச்சியால் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் வள்ளுவரைப்பற்றி எண்ணுகிற பொழுது வள்ளுவர் வாழ்ந்த நிலை என்ன என்று எண்ண வேண்டியிருக்கிறது. அவர் இவ்வளவு அருமையான நூலை யாக்கித்தந்தார் என்று சொன்னால் அவருடைய பெற்றோர் அவர் காலத்திய மக்களது மன நிலை முதலியன எப்படி யிருந்திருக்க வேண்டும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

"வள்ளுவர் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு எழுத்தாணியால் இந்நூலை எழுதி வைத்தார்’ என்று சொல்ல நம் மனம் இசையுமா? வள்ளுவர், வாழ்ந்த காலத்தில்-நூல் செய்த காலத்தில், தமிழகம் வள்ளுவர் கண்டு சொல்லிய முறைப்படி வாழ்க்கை நடத்தியது என்பதை நாம் மறக்கக்கூடாது. தொன்றுதொட்டே' அத்தகையதொரு சிறந்த வாழ்க்கை தமிழகத்தில் நிகழ்ந்தமை யினாலேயே திருவள்ளுவர் போன்ற பெருந்தகையார்கள் பிறக்க முடிந்தது.

வள்ளுவர் வழிவந்த பரம்பரை என்று சொல்லுகிற நம்மிடையே இன்று அறிவுக்குறை ஏற்பட்டுவிட்டது. வள்ளுவரைப் பற்றிப் பறை சாற்றுகின்றோம்; அரங்கு கூட்டு கிறோம்; எனினும் பெரும்பாலான மக்களிடத்தில் தமிழ்ப்