பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

376

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இருக்கிறதா? நமது நாட்டில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நமது நாட்டுத் தலைவர்கள் தாமே! நமக்குத் தெரிந்தவர்கள் தாமே! நமக்கு உறவினர்கள் தாமே! இவர்களுடைய வரவேற்புக்கு எத்தனை இலட்சங்கள் செல்லுகின்றன. தெரியுமா? அரசியல் பேரணிகளுக்குச் சொல்லவே வேண்டாம்! அதேபோலத்தான்! அரசியல் தலைவர்களின் பவனிகளில் வரும் நூற்றுக்கணக்கான கார்களின் அணி வகுப்பு, இனிய செல்வ, அரசியல் இயக்கங்களுக்குச் சளைத்ததல்ல, மத சம்பிரதாயங்கள்! கும்பாபிஷேகங்கள், திருவிழாக்கள் இவைகளில் சிக்கனப் பார்வையே கிடையாது! பலப்பல இலட்சங்கள் செலவழிக்கப்படுகின்றன!

நமக்கு அறிமுகமான ஒரு சிற்றறூரில் அண்மையில் முளைப்பாரி விழா எடுத்தார்கள்! பத்து நாள் விழா! பத்து நாளும் இரவும் பகலும் ஒலிபெருக்கிகள் அலறின! இரவெல்லாம் திரைப்படக் காட்சிகள்! கொட்டு மேளங்கள்! கோலாகல வைபவம்! நமது மதிப்பு, இந்த திருவிழாவை முன்னிட்டும் பொதுவாகவும் தனித்தனியாகவும் செலவழித்த ரூபாய் ஒரு லட்சம் இருக்கும்! திருவிழா எடுத்தவர்களில் பலர் வசதி அதிகம் இல்லாதவர்கள்! திருவிழா வேண்டியது தான்! பக்தி சிரத்தையுடன் திருவிழாக் கொண்டாடும் மக்களைப் பாராட்ட வேண்டியதுதான்! பக்தியைவிட, களியாட்ட உணர்வு மிகுதியாகி விட்டது! பக்தி, சாந்தம், அமைதி ஊக்கம் முதலிய குணங்களைப் பெறுவதற்காகவும், தனித்தனியாகவும் கூட்டாகவும் வளர்வதற்குரிய ஒரு சாதனம்! ஆனால், திருவிழா என்ற பெயரில் "அடிதடி" களைத் தவிர வேறென்றும் இல்லை... என்ற திரைப்படங்களுக்கு என்ன வேலை! திருவிழா முடித்த கையுடனேயே அடிதடி ரகளைகள், ஒரு பஜனை உண்டா? பக்திப் பாடல்கள் பாடும் அரங்கு உண்டா? பக்திச் சொற்பொழிவு உண்டா? ஒன்றும் இல்லை! திரைப்படங்களின் ஆக்கிரமிப்புத்தான்! ஏற்கனவே நாட்டில் திரைப்படக்