பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அறியவாம். அது சில கோவில்களில் முறை தவறி வைக்கப் பட்டிருக்கும். அது தவறு. ஏன், அந்தப் பேரின்பக் கூத்தை அந்த அம்மை பார்த்துக்கொண்டு இருக்கிறாள் என்று குமர குருபரர் வினா எழுப்பி விடை சொல்லுகிறார்.

அம்மையார் கூத்தைப் பார்க்கவேண்டும் என்ற அனுபவத்தோடு அல்லது பெருமானுடைய அழகைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தோடு அவ்வாறு இருக்கவில்லை. அந்தக் கூத்து ஒரு பேரின்பக்கூத்து. நிறைய நாள் வரட்சியிலே இருக்கிற உயிர்களுக்கு அந்தக் கூத்தினுடைய பேரின்பத்தைப் பார்ப்பதுடன், வாரி விழுங்கவும் ஆசை வரும்.

‘வாரி விழுங்கினேன், விக்கினேன்,
விதியின்மையால்’

அப்படிக் கண்டபடி வாரி விழுங்கினால், உண்ணத் துவங்கினால், அவர்கள் விக்கிச் சாவார்கள்.

ஆகையினால் தகுதியறிந்து ஊட்ட வேண்டும் என்பதற்காக அந்தக் கூத்திலே விளைகின்ற இன்பத்தையெல்லாம் அவள் வாங்கி, உயிர்களினுடைய தரம் அறிந்து பக்குவமாக ஊட்டுகிறாள் என்று சொன்னார்.

அது எப்படி என்று குமரகுருபரர் சொல்லுகிறார். குழந்தைக்கு நோய் என்றால் தாய்தான் மருந்து உண்பாளே தவிர, குழந்தை மருந்துண்பதில்லை.

குழந்தையின் நோயின் மருந்துக்குத் தாய்தான் பத்தியம் பிடிப்பாளே தவிர, குழந்தை பத்தியம் பிடிக்காது. அது போல, உயிர்களுடைய துன்பத்திற்கு இறைவன்தான் பத்தியம் பிடிக்கிறான்.

இதைத் திருக்கோவையாரிலே மாணிக்கவாசகர் இன்னும் நுணுக்கமாகக் கேட்கிறார். திருநீறு அணிந்தால்