பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் காட்டும் அரசு



209


நாம் விடுகின்ற மூச்சுக் காற்று ஆகும். அது நின்றுவிட்டால் ஆள் நின்றுவிட்டான் என்று அர்த்தம்!

அதற்குப்பின் பேச வராது, எழுத வராது; சிரிக்கவும், சிந்திக்கவும், அன்பு செய்யவும் முடியாது. ஆகவே உடம்பில் உயிர் தங்கியிருக்கிற அடையாளக் காற்று இருக்கிறபோதே பாவத்தைத் தூற்றிவிட்டு, புண்ணியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அரசுக்குரிய பொருளைப்பற்றிக் குறிப்பிடுகின்றபொழுது, நம்முடைய திருவள்ளுவர் காட்டுகின்ற அரசில் வரி விதிக்கின்ற, அதாவது சில குறிப்பிட்ட துறைகளைத் தவிர, பொதுப்படையாக மனிதனுக்கு வரி விதிக்கின்ற மரபைத் திருவள்ளுவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

அரசுக்கு வருகின்ற பொருள்கள் உறுபொருள், உல்கு பொருள், ஒன்னார்த் தெறு பொருள் ஆகும். ஒன்னார்த் தெறு பொருள்-பகைவனுடைய பொருளைக் கொண்டு வருவது ஒரு கொள்ளை அல்லவா? அது அறத்தின் பாற்பட்டதாகுமா?

அப்படிக் கேட்கும்போது, பகைப்புலத்திற்கு வரும் பொழுது அதற்கு நியாயம் வேறு.

மருத்துவமனையில் ஒருவன் “அய்யோ! அப்பா! குத்தினால் வலிக்கிறதே” என்று சொல்லலாமா? குத்துதலும் அவனுடைய நோய் நீங்குவதற்குத்தான். ஆக, நியாயம் எல்லா இடத்திலும் ஒரு மாதிரியாகாது.

ஆனால் வலியச் சென்று, சாவதானமாக, அமைதியாக இருக்கின்ற ஓர் அரசை, அமைதியாக இருக்கின்ற ஒரு நாட்டை, படை எடுத்துப் போர் தொடுத்து அழிப்பது என்பது பாபம்.

ஆனால், தற்செயலாகப் போர் நிகழ்ந்துவிடுகிறது என்று சொன்னால் போர் முனையிலே ஒரு நாட்டினுடைய மானத்தை, மரியாதையைக் காப்பதற்காக ஏற்படுகின்ற

தி.IV.I4.