பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி தடத்தில் பாரதம்

233


பாரானால் மனித குலத்தைப் பற்றியிருந்த கலி வேரோடும், வேரடி மண்ணோடும், கல்லி எரியப்பட்டிருக்கும் என்பது பாரதியின் நம்பிக்கை.

"தவத்தாலும், பரிபூர்ணத் துறவாலும் ஏற்படும் அசையாத மனோ தைரியத்தையும் எல்லையற்ற அன்பையும் எல்லா உயிர்களிடத்தும் ஆன்ம புத்தியையும் வைத்துக் கொண்டு இல்வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே இந்து மதத்தின் முடிவான தீர்மானம்”- என்று பாரதி எழுதுவதுடன், தனது வாதத்துக்கு அரணாக சந்நியாசிகளின் பரமநாதனாகிய சிவன், பார்வதியை இடப் பாகத்தில் கொண்டருளியதையும் தவமுனிவர் வசிஷ்டர் அருந்ததியுடன் கூடி வாழ்ந்த வாழ்க்கையையும் எடுத்துக் காட்டுகிறான்.

துறவை, "விலங்கு" என்று பாரதி வர்ணிக்கிறான். "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்று கவிதையில் அறைகூவல் விடுத்த பாரதி, உரைநடையில், மகளிருக்கு எதிரான சமூகத்தை நையப்புடைக்கிறான்.

நமது மகளிருக்கு கல்வி போதிக்க வேண்டும், என்று வலியுறுத்துகிறான். அதுமட்டுமா? வருங்கால மேதைகளை உருவாக்கும் தகுதி மகளிருக்கே உண்டு என்பது பாரதியின் கருத்து; நம்பிக்கை!

நாட்டில் நல்லன நடக்க வேண்டுமா? பெரிய காரியங்கள் நடக்க வேண்டுமா? எடுக்கும் காரியங்கள் யாவும் கை கூடிவர வேண்டுமா? மகளிரின் மனோ நிலை வளர்ந்து அவர்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் ஒன்றும் நடவாது; வெற்றியும் கிடைக்காது.

பாரதி, நிவேதிதா தேவி கூறியதாக எடுத்துக் காட்டி எழுதுவது, "ஐயோ, மாதர்களை இருட்டிலே தள்ளிவிட்டு அவர்கள் அறியாமல் நீங்கள் மேலான நிலைமைக்கு வந்துவிட முயல்வது வீண் முயற்சி! அது ஒருபோதும் நடக்க மாட்டாது" என்று நிவேதிதா தேவி கூறியபடி தேசாபி-

கு.vi.16