பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
100
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

மரத்திலேயே பின்னிக் கிடந்து - மரம் போலவே விளங்கினாலும், புல்லுருவி மரத்துக்குப் பகையே. புல்லுருவி வளர்ந்த மரம் வளம் குன்றும் - வலிமை குன்றும்; பூக்காது - காய்க்காது. புல்லுருவி, ஒரு “பூர்ஷ்வா”. அதாவது மரம் உழைத்து எடுத்துக்கொண்டு வரும் உணவை இடைமறித்துப் பறித்துக் கொள்வது அது. அதுபோல அறிவின் பயனை உயிர்க்குச் சேரவிடாமல் ஆணவம் தடுத்துப் பறிக்கும். அதனால் அவ்வாணவ முடையவன் மிண்டு செய்வான். எனவே, இறைவன் இராவணனை வெற்றி கொள்ளவில்லை; ஆறுமுகச் செவ்வேள் சூரபதுமனை வெற்றி கொள்ளவில்லை. அவர்களுடைய மிண்டுத் தனத்தையே வெற்றி கொண்டனர்.

இறைவன் பெற்ற வெற்றியால் இராவணனுக்கே பயன்; சூரபதுமனுக்கே பயன். மற்றவர்க்குப் பயன்தரும் வெற்றியே வெற்றி! அது இறைவன் பெறும் வெற்றியேயாம். தமக்கு நலன் சேர்க்கும் வெற்றி இறைவனின் வெற்றி! அதனாலேயே வணங்குகிறோம்; வாழ்த்துகிறோம்.

வண்டலார் வயற்சாலி ஆலைவளம் பொலிந்திடவார் புனல்திரை
கொண்டலார் கொணர்ந்தங் குலவுந்திகழ் கோட்டாற்றில்
தொண்டெலாம் துதிசெய்ய நின்றதொழிலனே! கழலால் அரக்கனை
மிண்டெலாம் தவிர்த்தென் உகந்திட்ட வெற்றிமையே.

- திருஞானசம்பந்தர்