பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

352

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்ற ஆப்த மொழியையும் உலகிற்கு உணர்த்தவே தூது நடந்தான். இதனை நால்வர் நான்மணிமாலை,

நோக்குறு நுதலோன் நின்னிட விருப்பால்
நூற்பகவு அன்னநுண் மருங்குல்
வார்க்குளி முலைமென் மகளிர்தம் புலவி
மாற்றுவான் சென்றனன் என்றால்
கோக்கலிக் காமன் வயிற்றிடைக் குத்திக்
கொண்டதே துக்குநீ புகலாய்
காக்கரு மதலை விழுங்கிய முதலை
கான்றிடத் தோன்றும்நா வலனே!

(நால்வர் நான்மணிமாலை 15)

என்று கூறும். நம்பியாரூரர்பால் உள்ள விருப்பத்தால்தான் இறைவன் துது போனான். இறைவன் அடியார்க்கு எளியவன் என்பது மட்டும் கருத்தல்ல; நடைமுறையும் அதுவேயாம் என்பதை நிரூபணம் செய்கிறது இந்த நிகழ்வு.

வேதன் நாரணன் ஆர ணம்மறி
யாவி ழுப்பொருள் பேதைபால்
துரத னாயிரு கால்ந டந்திடு
தோழன் வன்மைசெய் தொண்டனுக்(கு)
ஆத லால்அடி யார்க ளுக்கெளி
யான்அ டிக்கம லங்கள்நீ
காத லால்அணை ஈண்டவன் வேண்டின
இம்மை யேதரும் கண்டிடே!

(சித்தியார் பரபக்கம்-57)

என்று சிவஞானசித்தியாகும் இந்தக் கருத்தை உறுதி செய்கிறது.

மாதவச் சிவஞானமுனிவர் நம்பியாரூரரை “எமது குல தெய்வம்” என்று போற்றுகின்றார். நம்பியாரூரர்க்கும் சடங்கவி சிவாச்சாரியார் மகளுக்கும் நடைபெற இருந்த மரபுவழி திருமணத்தைத் தடை செய்தார் சிவபெருமான்.