பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/381

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சுந்தரர்
377
 

என்ற வரிகள் அவ்வரலாற்றுக்கு அகச்சான்று. இந்தத் துது தொடர்பாக ஏயர்கோன் கலிக்காமர் பிணக்குக் கொள்ள இறைவன் அப்பிணக்குக்கு நம்பியாரூரர் மூலமே தீர்வு காண்கிறார்.

சேரமான் தோழர்

சுந்தரர் தொடர்ந்து திருமணக் கோலத்தில் மகிழ்ந்து வாழ்தலை விரும்புகின்றார். திருநாகைக் காரோணப் பதிகத்தில் அணிகளும் பிறவும் வேண்டிப் பாடுகின்றார்.

பத்துரர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடி
பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்
செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்
செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநாள் இரங்கீர்
முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை
அவையூணத் தந்தருளி மெய்க்குஇனிதா நாறும்
கத்துரரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே
                                                           (7.46.1)

.

இந்தப் பாடலில் நட்புரிமையின்பாற்பட்ட கிண்டல், கேலியெல்லாம் இருக்கிறது. நாகைக் காரோணத்து இறைவனும் ஆரூரர் வேண்டியன எல்லாம் வழங்கியருளினார். மேலும் கடிதில் செல்லக் குதிரையும் கொடுத்தார்.

நம்பியாரூரர் வாழ்க்கை இனிதே நடைபெற வேண்டும் என்ற கவலை இறைவனுக்கு உண்டு. தாமே தோழமையாக இருந்தாலும் யாதும் குறை வந்துவிடக் கூடாதே என்ற கவலை, இறைவனுக்கு இருந்தது. கலிக்காமருடன் இருந்த பிணக்கைத் தவிர்த்து, நட்பாக்கித் தந்தார்.