பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சி விளக்கம்

315


அதற்காகவாவது பாடக்கூடாதா? என்று, “எமக்கும் ஏனோர்க்கும் தங்கோனைப் பாடேல் ஓர் எம்பாவாய் என்று பாடுகின்றனர்.

இறைவன், மெய்யடியார் உள்ளத்தே பள்ளக்காண் உறுபுனல்போல் வந்து தங்குவான். இது “மலர்மிசை ஏகினான்!” என்ற திருக்குறளுக்குப் பரிமேலழகர், “அவரவர் நினைந்த வடிவத்தோடு விரைந்து சேறலின்” என்று எழுதிய உரையோடு ஒப்புநோக்கி உய்த்துணரத் தக்கது. இறைவனின் திருவருளுக்குத் தாழ்ந்த நெஞ்சம் நாம் பெற்றால், அத்திருவருள், பெற்ற அளவிலேயே வந்து பொருந்தும். “தாழ் வெனும் தன்மையோடு சைவமாம் சமயம் சாரும் ஊழ்பெற லரிது” என்றார் அருணந்தி சிவம். ஆதலால், நாம் இறைவனைத் தேடவேண்டாம். அவன் அருள் நோக்கித் தாழ்வோம்! அவனே வந்து ஆட்கொள்வான்.

அன்னே யிவையுஞ் சிலவோ? பலவமரர்
உன்னற் கரியா னொருவ னிருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாவென் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை யென்னரைய வின்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாயி யின்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்.

7

துயிலில் ஆழ்ந்து கிடப்பவள், இறைவனின் பொருள் சேர் புகழ் பரவும் ஒலி கேட்டும் எழுந்திருக்கவில்லை! உறங்குபவள் வயதில் இளையாள். “அம்மா! தாயே!” என்று நகைப்புக் குறிப்பில் அழைக்கின்றனர். “அம்மா! தாயே!” இப்படியும் ஒருநிலை உனக்கு உண்டா? நீயே முன்பெல்லாம் சிவத்தை நினைப்பூட்டும் சிறு ஒலிகள் கேட்டால் கூட-திருச்சின்னம் கேட்டால் “சிவ, சிவ!” என்று உணர்ந்து சொல்வாய்; அங்ஙனம் அந்தத் திருநாமத்தை நீ சொல்லும்