பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


‘சி’ சுரமாகிய உடையானும் “வ” கரமாகிய உடையாளும் இருக்கின்றமையை உணர்த்துகிறது.

“உடையாள் உன்றன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீ யிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும்
இருப்ப தானால்”

என்பது மீண்டும் ஓர்க; உணர்க.

கண்ணப்பர் பற்றிய நினைவு

மாணிக்கவாசகர் கண்ணப்பர், சண்டீசர் ஆகிய நாயன்மார்களைப் போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார். கண்ணப்பரை ஊன் உருக, உயிர் உருகப் பாராட்டி உள்ளார்.

“கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என் னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப் பணித் தென்னை வாவென்ற வான்கருணைச்
சுண்ணப் பொன் நீற்றற்கே சென்றூ தாய் கோத்தும்பீ!

(திருக்கோத்தும்பி-4)

என்ற பாடலால் கண்ணப்பர் அன்புருவாகி நின்ற காட்சியை விளக்குகின்றார். வேறொரு பாடலில் கண்ணப்பருடைய பூசை முறைகளை விளக்கிப் பாடியுள்ளார்.

பொருட் பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல் விளங்கச்
செருப்புற்ற சீரடி வாய்க்கலசம் ஊனமுதம்
விருப்புற்று வேடனார் சேடறிய மெய்குளிர்ந்தங்கு
அருட்பெற்று நின்றவா தோணோக்கம் ஆடாமோ!

(திருத்தோணோக்கம்-3)

என்றும் பாடியிருப்பதறிக. பொருட் பற்றிச் செய்கின்ற பூசனைகள் என்பது ஆன்ம வழியில் செய்யப்படும்