பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

203


கூறுகிறார். பழந்தமிழகத்தில் திருத்தொண்டர்கள் இருந்தனர். திருத்தொண்டர்கள் திருக்கோயில்களில் உழவாரப் பணி செய்தனர். இன்றோ, திருக்கோயில்கள் திருத்தொண்டர் களால் சூழப்பெற வில்லை. அது தொழிலாகிவிட்டது. பூசனை செய்பவரிலிருந்து, தூய்மை - துப்புரவு செய்யும் பணியாள் வரை இன்று தொழில் நினைவே! வணிகக் கண்ணோட்டமே!

அடியார்கள் ஆதல் எளிதன்று. அரிதினும் அரிது. ஆள்பவனாவதற்குரிய முயற்சியை விட அடியார் ஆதலுக்கு நிறைந்த முயற்சி தேவை. யாருடைய இதயம் அசைவின்றி ஆண்டவன் அடிகளைச் சார்ந்திருக்கிறதோ அவரே அடியார். நீரூற்று மடியில் உள்ள மரம் வளமான பசுமை பெற்றிருத்தல் போல் திருவடிகளைத் தாங்கிய இதயம் பெற்ற அடியார்கள் அன்பினால் - அருளினால் செழித்து வாழ் விப்பர். அடியார்கள் "நான் ஒழிந்தவர்கள். ஆங்கு முனைப் பில்லை. மரத்தின் வேர் மண்ணிலே மறைந்து வளம் தருதல்போல யார்க்கும் அடியாராகித் தொழும்பு பூண்டு பணி செய்வர். புகழ்மொழி அவர்களை மயக்குவதில்லை. இகழ்மொழி அவர்களுக்கு நோதலைத் தருவதில்லை. திருத்தொண்டர்கள் அளவிலாத பெருமை யுடையவர்கள். அவர்களுடைய வரலாறு அகத்திருள் நீக்கும். இருள் என்பது அறியாமை. அறியாமை, அணவத்தின் விளைவு. ஆணவம் அடங்காப் பிடாரித்தனமுடையது. அருளார்ந்த அனுபவம் தரும் பத்திமை வாழ்க்கையே, தாழ்வு எனும் தன்மைதருவது. திருவாரூரில் அடியார்களை மதியாது சென்ற ஆரூரரை “அடியார்க்கு அடியேன்” என்று திரும்பத்திரும்பச் சொல்லவைத்தார் திருவாரூர்த் தியாகேசர் அங்ங்னம் பிறந்ததுதான்் திருத்தொண்டத் தொகை. திருத்தொண்டத் தொகையிலிருந்து மலர்ந்தது திருத்தொண்டர் புராணம். புராணம் என்பது பழைய வரலாறு. சேக்கிழார் செய்த அந்தப் பழையவரலாற்றை அடியார்கள் வரலாற்றைக்