பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெரியபுராணச் சொற்பொழிவுகள்

27


குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தின் முற்பகுதியும் ( இரண்டாம் குலோத்துங்கன் காலம் கி.பி. 1133-1150, மூன்றாம் குலோத்துங்கன் காலம் கி.பி. 1170-1218) என்று நுண்ணிதின் ஆராய்ந்து கூறியிருப்பதே சரியானதெனக் கருதலாம்.

சேக்கிழாரின் சிறப்புக்கள்

சேக்கிழார், பிறந்த குடிக்கேற்ப இளமையிலேயே கல்வி, கேள்விகளிற் சிறந்து நுண்மாண் நுழைபுலம் உடையவராய் விளங்கினார். சேக்கிழாரின் அமைச்சுப் பொறுப்பால் சோழப் பேரரசு, புகழ் பெற்றது; அதுமட்டுமன்றிச் சிவ புண்ணியப் பேரரசாகத் திருவருட் சார்புடைய அருட் பேரரசாக விளங்கி இன்பம் பெருக்கிற்று. சேக்கிழார், கல்வியில் வல்லவராக இருந்தது போலவே, தேர்ந்து தெளியும் அறிவும் பெற்றிருந்தார்; சிவ நெறியில் சிந்தை கலந்த ஈடுபாடு கொண்டிருந்தார்; அருள் பழுத்த மனத்தராக விளங்கினார்; பத்திச்சுவை நளிை சொட்டச் சொட்டப்பாடும் கவியரசாக விளங்கினார். சேக்கிழாரின் நெஞ்சம், திருவருளில் தோய்ந்த நெஞ்சமாதலால், அவர் வாழ்வும் வளநிறை வாக்கும் அருளியலுக்கு ஆக்கந் தருவனவாக அமைந்தன.

சேக்கிழாரைப் பாராட்டியோர்

சேக்கிழாரடிகள், அவர்தம் பெரிய புராணத்தை இனிதே தொடங்கி முடிக்க அம்பலத் தாடுவான் "உலகெலாம்” என்று அடியெடுத்துக் கொடுத்துச் சிறப்பித் தமையை வாழ்த்த வார்த்தைகளில்லை! அநபாயசோழனின் பேரரசு, அருளரசாகிய சேக்கிழார் பெருமானை அரசுக்குரிய மரியாதைகள் செய்தது. இல்லை, அரசனே அணிபெறு யானைமீதமர்த்தித் தான்் பின்னிருந்து துணைக்கையால் இணைக்கவரி வீசிச் சிறப்பித்தான்! சேக்கிழாருக்குப் பிறகு வந்த அனைத்துக் கவிஞர்களும் சேக்கிழாரைச் சிந்தை குளிர வாழ்த்தியிருக்கிறார்கள். உமாபதி சிவம் திருத்தொண்டர்