பக்கம்:குப்பைமேடு.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

ராசீ

இவனை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந் தது. அம்மா சொன்னால் கேட்டு நடப்பான் என்ற அசைவு என்னுள் ஏற்பட்டது.

இவள் ஏன் இங்கு வருகிறாள்? என்ற வினா எங் களுக்கு ஏற்பட்டது.

'கார்த்திக் இருக்கிறாரா'? என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தாள். என் பையன் பெயர் கார்த்திக் என்பதை அறிமுகப்படுத்த மறந்து விட்டேன். அவன் ரேவதி பின்னால் சுற்றுகிறான் என்று என்னால் எப்படிக் கூற முடியும். வாழ்த்துக்கள்' என்று சொல்லிக் கொண்டே வந்தாள்.

‘'எதுக்கு?'

'எங்க காயத்திரி உங்க பையனைக் காதலிக்கிறாள் என்று கேள்விப்பட்டேன். அவர்கள் ஒருவரை ஒருவர் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள்'.

'அதை நீ ஏன் சொல்ல வருகிறாய்?'

'சொன்னால் தான் அது உறுதியாகும். அவர்கள் வெட்கப்படுகிறார்கள். நாலு பேர் பேசினால் அது உறுதியாகிவிடும்'.

அவள் மிகவும் குறும்புக்காரி என்பதைக் காட டிக் கொண்டாள்.

என் மனைவிக்கு டாக்டர் மகளைப் பார்த்ததும் அவள் மனம் அடித்துக் கொண்டது.

'இந்தப் பையன் இப்படிச் செய்வான் என்று எதிர் பார்க்கவில்லை' என்று பேச ஆரம்பித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/222&oldid=1116148" இலிருந்து மீள்விக்கப்பட்டது