பக்கம்:குப்பைமேடு.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

ராசீ

அவள் வந்தாள் என்று பரவ ஆரம்பித்தது; அடித்தது யோகம் என்று ஆவேசப்பட்டார்கள். நான் எங்கேயோ போய் விட்டேன். பெரிய இடத்துப் பெண்ணாமே என்று எனக்கு வேண்டியவர்கள் வந்து விசாரித்தார்கள். அந்தச் சந்தோஷத்தைக் கலைக்க விரும்பவில்லை. இந்தப் பையன் கெடுத்து விட்டான். அந்தக் கோபம் ஒருபக்கம்; அதே சமயத்தில் சடங்கு, சம்பிரதாயங்களில் பழகிப் ப்ோன எங்கள் வீட்டில் அவளை வைத்துச் சமா ளிக்க முடியுமா? என்று யோசிக்க வேண்டியிருந்தது.

இந்த நாட்டில் சாபக்கேடு ஜாதகம் என்ற பூதம் ஆட்டியது. என் மனைவி ஜாதகம் சரியில்லை என்றால் எந்த இடமாக இருந்தாலும் அவளால் ஏற்றுக் கொள்ள முடியாது. இவள் மேல் நாட்டில் பிறந்ததால் தேதி குறிப்புக் கூட எழுதி வைக்கவில்லையாம். அது இல்லாமல் மேல் எப்படித் தொடர முடியும்? இவள் ஏன் இங்கு வர வேண்டும். புரியவே இல்லை.

கார் இந்தப் பக்கம் வந்திருக்கும். சும்மா மரியாதைக் காகவும் வந்திருக்கும். அதே சமயத்தில் மனத்தில் பட்ட தை மறைக்காமலும் கூறியிருக்கலாம். வாழ்த் துத் தெரி விப்பது விசித்திரமாக இருந்தது. இன்னும் அது பற்றிப் பேச்சுத் தொடரவே இல்லை. அதற்குள் வாழ்த்துக்கள்; என் மரமண்டைக்கு எங்கே விளங்கப் போகிறது? இப் பொழுது விளங்குகிறது. அவள் தந்தை சொல்லி அனுப்பி யிருக்கலாம். நாங்கள் அவளைப் பற்றி ஏதாவது ஆசை கள் வளர்த்துக் கொண்டிருப்போம் என்று அவள் வாயா லேயே அவளுக்கு அவனிடம் எந்த ஆசையும் இல்லை என்று தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்தினார்கள் என்று தெரிகிறது. பையன் வந்ததும் அவனிடம் என் மனைவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/224&oldid=1116150" இலிருந்து மீள்விக்கப்பட்டது