பக்கம்:குப்பைமேடு.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

ராசீ

'ஏன்? ஏதாவது புதிய இடம்'

'இல்லை, பழைய இடம்தான்'.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்பொழுது காயத்திரி அப்பா நிறைய சம்பாதிக்கிறார். மேல் வரும்படி நிறைய வருகிறது. எனக்குத் தலை சுற்றுவது போல இருந்தது.

'காந்தி சீடர் மதுபானம் அருந்தத் தொடங்கி விட் டார் என்று தெரிந்தது. என் நண்பனுக்கு இப்பொழு தெல்லாம் வேண்டிய பெர்மிட்டுகள், டெண்டர்கள், சலுகைகள் சிரமமில்லாமல் கிடைப்பதாகச் சொன்னான். காரணம் புரிந்தது.

காயத்திரிக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யக் காத்திருக்கிறார்கள் என்ற செய்தியை என் மனை விக்கு எடுத்துச் சொன்னேன்.

யார் சொன்னது?"

"சாருகாசினி'

அவள் வேடிக்கைக்குச் சொல்லியிருப்பாள்'

'இல்லை; நானும் கேள்விப்பட்டேன். அவர் வேலை செய்யும் துறையில் எல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள். இவர் வழி விட்டதால் மற்றவர்கள் தாராளமாக அறு வடை செய்ய முடிகிறதாம். நந்தி போல் குறுக்கே இருந்து கொண்டு யாரையும் முன்னுக்குப் போகாமல் தடுத்து வந் தவர் அவரே வாங்க ஆரம்பித்து விட்டாராம்'.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/226&oldid=1116152" இலிருந்து மீள்விக்கப்பட்டது