பக்கம்:குப்பைமேடு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

ராசீ

'அப்படி அவனைப் பழக்கிவிட்டோம். பொதுவாக நாங்கள் சிரிப்பது இல்லை, அது எங்கள் வீட்டுப்பழக்கம்: சிரித்தால் கெட்டு விடுவான் என்று இப்படி வளர்த்து விட் டோம்' என்று விளக்கம் தந்தார்.

சில வீட்டுக் குழந்தைகள் 'உம்' என்று முகத்தை வைத்துக் கொள்ளும்; அதற்குக் காரணம் பெற்றோர்கள்; சிரித்துப்; பேசுவதும் ஒரு வகை விளையாட்டு; இதைப் பல பேர் தெரிந்து கொள்வதில்லை. ஏதாவது பேசிச் சிறுவர்

களைச் சிரிக்க வைக்கவேண்டும். அதுதான் வீட்டில் கலகலப்பு உண்டாக்கும்' என்றேன்.

"நீங்கள் சொல்வது உண்மைதான்'.

'பெரியவர்களைக் கிண்டல் செய்யமுடியாது; சின்னப் பிள்ளைகளைப் பார்த்துதான் சிரிக்க வைக்க முடியும், அதில் நாமும் மகிழ்ச்சி அடையலாம்' என்றேன்.

'அதுக்கு என் மனைவி தான் காரணம் அவள் அதிகம் சிரிக்கமாட்டாள்" என்றார்.

ஏன்'

"அவள் பல் கொஞ்சம் எடுப்பு; அதை வெளிக்காட்டக் கடுப்பு' என்றார். -

'அவர்கள் உங்களை விட கொஞ்சம் வயது அதிகமோ?'

"எப்படிச் சொல்கிறீர்கள்'

'தலை நரைத்து விட் டதே'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குப்பைமேடு.pdf/36&oldid=1113009" இலிருந்து மீள்விக்கப்பட்டது