பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.என். அண்ணாதுரை

37


புகுந்து விட்டது. "எப்படி நான் தப்பமுடியும்" என்ற அச்சம் அவரைப் பிடித்துக்கொண்டது. துறைமுகத்தருகே நின்றுகொண்டு, தன் கப்பலின் வரவுக்காகக் காத்துகொண்டிருக்கும் வணிகர் போல, அவர் மனம் பாடுபட்டது. குமரியின் கள்ளங்கபடமற்ற உள்ளம் அவருக்குத் தெரியும். பணிவுள்ளவளாக அவள் தன்னிடம் நடந்து கொள்கிறாள்; பசப்பு அல்ல என்பதையும் அறிவார்; தம் மனத்திலே மூண்டுவிட்ட தீயை அவள் அறியாள், அறிந்தால் திகைப்பாள் என்பதும் தெரியும். கொடியிலே கூத்தாடும் முல்லையைப் பறிக்கும் நேரத்தில் வேலிப்பக்கமிருந்து தோட்டக்காரன் ஏ ! யாரது? கொடியிலிருந்து கையை எடு என்று கூவினால். எவ்வளவு பயம் பிறக்கும்? தோட்டக்காரன் கூவாமல் முல்லையே "நில்! பறிக்காதே! உனக்காக அல்ல' நான் பூத்திருப்பது !" என்று கூவினால் பயம் எவ்வளவு இருக்கும்? அவ்விதமான அச்சம் செட்டியாருக்கு. அடக்கமுடியவில்லை. அவளோ அணுவளவும் சந்தேகிக்கவில்லை. செட்டியாரின் உண்மைநிலை தெரிந்தாடு அவள் உள்ளம் எவ்வளவு வாடும் ? எவ்வளவு பயப்படுவாள்? மதிப்புத்துளியாவது இருக்குமா? "கொடியிலிருந்து முல்லை பேசுவது போல அந்தக்குமரி, ஏனய்யா! இதற்குத்தான கோயில் கட்டுகிறேன் குளம் வெட்டுகிறேன் என்று ஊரை ஏய்த்தாய்? கட்டுக்கட்டாக விபூதி-காலை மாலை குளியல்- கழுத்திலே உருத்திராட்சம்—கந்தா முருகா என்று பூஜை கல் உடைக்க வருபவளைக் கண்டால், கைபிடித்து இழுப்பது, இதுதான் யோக்யதையா? ஊருக்கெல்லாம்