பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

குமரிக் கோட்டம்


இரவு, சொக்கனை ஏதாவது வேலையாக வெளியூருக்கு அனுப்பிவிடுங்கள். நான் முடித்துவிடுகிறேன்" என்றாள் மீனா. இஷ்டதேவதை பிரசன்னமாகி வரம் கொடுத்தால் எவ்வளவு சந்தோஷம் வருமோ அவ்வளவு ஆனந்தம் செட்டியாருக்கு. சொக்கனை வெளியூர் அனுப்புவது சிரமமில்லை, அனுப்பினார். மீனா, ஏற்பாட்டின்படி செட்டியாரிடம் வந்தாள்; கச்சக்காய் அளவுக்கும் குறைவு ஏதோ லேகியத்தைக் கொடுத்தாள் செட்டியா ரிடம். "குமரியைக் கூப்பிட்டனுப்பி இந்த லேகியத்தைத் தின்றுவிடும்படி செய்யுங்கள். பிறகு அவள் உங்கள் பொருள்; விடிஞ்ச பிறகுதானே சொக்கன் வருவான்!" என்று யுக்தியும் சொல்லித் தந்தாள். நடுங்கும் கரத்திலே லேகிய உருண்டையை வாங்கிக்கொண்டு செட்டியார், "இது என்ன மருந்து? ஆபத்துக் கிடையாதே" என்று கேட்டார். இது என்ன மருந்து என்று நீங்கள் நாளைக் காலையிலே என்னிடம் சொல்வீர் செட்டியாரே! நான் போய் குமரியை அனுப்புகிறேன், லேகியம் செய்யும் வேடிக்கையைப் பார்த்துக்கொள்ளுங்கள் நீங்களே" என்று மீனா கூறிவிட்டுப் போய்விட்டாள்.

அரைகுறையாகக் கட்டப்பட்டிருந்த கோயிலிலேயே ஒரு சிறு அறை, செட்டியார் தங்கி இருந்த இடம். அகல் விளக்கு அதிகப் பிரகாசமின்றி எரிந்து கொண்டிருந்தது. வேலையாட்கள் தூங்கும் சமயம். குமரி அவசரமாக ஓடிவந்தாள் கோயிலுக்கு, அறையிலே செட்டியார் உலவிக்கொண்டிருக்கக் கண்டு, "என்னாங்க உடம்புக்கு! என்னமோ நொப்பும் நுரையுமா தள்ளுது, போய்ப் பாருடி, யாரையும்