பக்கம்:குமரிக்கோட்டம், அண்ணாதுரை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

குமரிக் கோட்டம்


"ஏன், செட்டியாரே, ஆடிக்கிட்டே இருக்கறே? ஆமாம், ஏன் இத்தனி விளக்கு?"

ஒருசமயம் குமரிக்குப் பைத்தியம் பிடித்து விட்டதோ என்று செட்டியாருக்குத் திகில் உண்டாகி விட்டது.

"குமரி உட்கார்!" "எங்கே உட்காரவாம்!" அங்கே இருந்த நாற்காலியிலே செட்டியார் உட்கார்ந்துகொண்டு, "குமரி! இங்கே வா! இப்படி உட்கார்" ஏன்று கொஞ்சினார்.

குமரி, "என்னா அது ! ஏனய்யா, செட்டியாரே! விளையாட்டா செய்யறே !" என்று மிரட்டினாள். செட்டியார், லேகியம் குமரியின் புத்தியைக் கெடுத்து விட்டது. ஆனால் அந்த நிலையிலும் அவளை இணங்க வைக்கவில்லை" என்று நினைத்து மேலும் பயந்தார். மறு விநாடி, குமரி கலகலவெனச் சிரித்தாள். செட்டியார் அருகே போய், அவருடைய முகவாய்க் கட்டையைப் பிடித்தாட்டி, "செட்டியாரே ! செட்டியாரே !" என்று ஏதோ பாடத் தொடங்கினாள். அதற்குமேல் செட்டியாரால், பயத்துக்குக் கட்டுப்பட்டிருக்கவும் முடியவில்லை. "கண்ணு! குமரி!" என்று கொஞ்சியபடி, அவளை அணைத்துக்கொண்டு, முகத்தோடு முகத்தைச் சேர்த்தார், இதழையும் .......

'சே, கட்டேலே போறவனே?' என்று கூவிக் கொண்டே, செட்டியார் பிடியிலிருந்து திமிரிக் கொண்டு கிளம்பினாள் குமரி. இதற்குள், ஆடை நெகிழ்ந்து புரண்டிடவே. காலிலே புடவையின் ஒரு முனை சிக்கிக்கொள்ள, இடறிக் கீழே வீழ்ந்தாள்.