ஞாலநூல் காலப் பகுதிகள்
43
பாறையில் இடையிடையே யுள்ள கருப்பொருள் களை எரித்துவிடக் கடுமையான பகுதிகள் பொடி யாகி மணலாகின்றன. இங்ஙனம் பாலைவனங்கள் ஏற்பட்டு அவற்றின் மீதுள்ள காற்றினால் மணற் பட லங்கள் உண்டாகின்றன.
காற்றுடன் வீசும் மணலாலும்,ஆறுகளா லும் பாறை பொடியாகி மண் உண்டாகிறது. மண்ணு டன் நீர்கலக்க அதில் சிறு செடி கொடி உண்டாகி அவை இறந்துபட்டபோது அவற்றின் கருப்பொருள் மண்ணுடன் கலந்து உரமாகிப் பெருஞ்செடிகளுக் குணவாகிறது. இங்ஙனம் மண்ணும் உரமும் வரவர வளர்ந்துவர, நீரினின்றே பிற உயிரினங்கள் உண் டாகி இச்செடி கொடிகளைத் தின்று வளர்கின்றன.
உலகின் மண் உண்மையில் காலனது வயிறே யாகும். எல்லையற்ற காலத்தில் பிறந்திறந்த உயிர் கள் அனைத்தும், செடி கொடியும் விலங்கினங்களும் எல்லாம் இதில் செரித்துள்ளன. இன்று ஞால் இயலார் மண்ணை ஆராய்ந்து அது ன்னவகை என் றறிவதுடன், அதன் உட்பகுதிகளை ஆழத்தோண்டி அதன் பலவகையான அடுக்குகளி லிருந்தும் அவ் வடுக்குகள் ஏற்பட்ட கால எல்லை இது, அஃது இத் தனை ஆயிர ஆண்டு நீடித்திருந்தது, அக் காலத்தின் தட்ப வெப்ப நிலை இது, உயிர்வகை செடிவகை இவை, மனிதவாழ்வு இத்தகையது என்ற எல்லாத் துறை அறிவுகளையும் நமக்குச் சேகரித்துத் தருகின் றனர்.
ஒவ்வொரு நில அடுக்கும் ஞால இயல்படி ஒரு காலப் பகுதியைக் காட்டும் ஓர் ஏடு ஆகும். அக்காலப்பகுதி மனிதகால அளவைக்கப்பாற்பட்டுப்