உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தாயும் கன்றும்

19

தாயின் மடியை விடாப் பிடியாகப் பற்றிக்கொண்டு தான் இருந்தது.

பசு மாட்டுக்குத்தீனிபோடுகிறவன் அவன்.பராமரிக்கிறவன் அவன். இப்போதெல்லாம்,மாட்டுத் தீவனத்தின் விலை எவ்வளவு உயர்ந்துவிட்டது! இன்னும் தண்ணீருக்கு யாரும் விலை வைக்கவில்லை;அப்படிஇருக்கிறதால்தான் பாலகிருஷ்ணன் பிழைக்கிறான் இல்லாவிட்டால்-

அவனுடைய அம்மா, அவன், அவன் மனைவி மூன்று பேரும் உழைக்கிறார்கள்; மாட்டைப் பராமரிக்கும் உழைப்புத்தான். தன்உறவில்நாட்டுப்புறத்திலிருந்து ஒரு பெண்ணை அவன் தன் வாழ்க்கைத் துணைவியாகப் பொறுக்கிஎடுத்திருக்கிறான்.பட்டணத்துவாயாடிகளைப்போன்றவள் அல்ல அவள்;நாலுபேர் செய்கிற வேலையை முகம் சிணுங்காமல் குதிரைக் குட்டியைப் போல் ஒருத்தியாகவே குதூகலத்துடன் செய்கிறாள்.இவ்வளவுபேர்சேர்ந்துஉழைக்கிறஉழைப்பிலே கன்றுக் குட்டி ஒரு வேலையும் செய்யாமல் பாலைக் குடிக்கிறதென்றால் பாலகிருஷ்ணனுக்குக் கோபம் வருமா, வராதா? சொல்லுங்கள்!

ஆனால் அந்த நாட்டுப்புறத்துப் பெண் இருக்கிறாளே அவன் மனைவி-அவள் பேர்நல்லம்மாள்- அந்த நல்லம்மாள் கிராமத்தில் வளர்ந்தவள். "கொழு கொழு கன்றே, கன்றின் தாயே" என்று குழந்தைகள் கதை சொல்லும் கூட்டத்தைச் சேர்ந்தவள்; கன்றுக்குட்டி கொழு கொழு வென்றிருப்பதைப் பார்த்துக் களிக்கும் உழவர் வீட்டிலே பிறந்தவள்."இந்தக் காளைக் கன்று நாளைக்கு எந்த மகா ராஜனுடைய வில் வண்டியிலே பூட்டும் பெருமையை அடையப் போகிறதோ!"என்று கன்றுக் குட்டியைப் பார்த்துப் பெருமைப் படும்இயல்புடையவர்கள்அவர்கள்.

நல்லம்மாளுக்கு இந்தக் கன்றுக் குட்டியைக் காணும்போதெல்லாம், "ஐயோ,பாவம்!"என்று இருக்கும். அவள் இந்த வீட்டுக்கு வந்து நாலு ஆண்டுகள் ஆகிவிட்டன.