பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

2. உடல் நல்ல உரம்பெற்றதாய், நோய்நொடி இல்லா ததாய் இருந்தால் உலகில் நல்வாழ்வு நடத்த முடியும். எவ் வளவு செல்வம் இருந்தாலும், கல்வி அறிவு இருந்தாலும், போக்குவரவுக்குரிய சாதனங்கள் இருந்தாலும் உடல் உரங் குன்றி, நோய் கண்டு நலிந்து இருந்தால் பயன் இல்லை. ஆகவே, இம்மை இன்பத்தை நல்ல முறையில் துய்க்க வேண்டுமானுலும், ஆரோக்கியமாக இருக்க வேண்டுமான லும், உடற் பலம் மிகமிக இன்றியமையாததாகும்.

3. உடற் பலம் எப்படி வரும் வேவா வேளேக்கு உண்டு வந்தால் உடல் உரம் வந்து விடுமா? உண்ட உணவு எளிதில் ஜீரணமாகாமல் வயிற்றுப் போக்குத்தான் எற்படும். உடல் உரம்பெற வேண்டுமானுல் உடற் பயிற்சி செய்ய வேண்டும். உடற் பயிற்சியால் தேக பலத்தை கன்கு பெற லாம். தேகபலம் மனுேபலத்தைப் பெருகச்செய்யும். கல்ல ஞாபகசக்தி இருந்தால்தானே கல்வியை நன்கு கற்க முடியும்: உடல்பலம் குன்றி நோய் வாய்ப்பட்டவன் எப்படிப் படிக்க இயலும் ? நோயாளிக்குப் பாடம் சொல்லாதே என்று எச் சரிக்கை செய்கிறது தமிழ் இலக்கணமாகிய நன்னூல், பிணி யனுக்குப் பகரார் நூலே என்பது அந்நூல் விதி. ஆகவே, பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குத் தேகப் பயிற்சி மிக மிக வேண்டற்பாலது.

4. தேகப் பயிற்சி செய்வதால் நரம்புகள் முறுக்கேறு கின்றன. தசைகள் நன்கு திரண்டு வருகின்றன. மூச்சோட் பமும் நன்கு நடக்கிறது. இரத்த ஓட்டமும் தடைப் படுவ தில்லை. நல்ல பசி எடுக்கத் தொடங்கும். கழிவுப் பொருள் கள் உடலில் தங்கப்பெருமல் வெளியே தள்ளப்படும். உடற் கட்டு அமையப்பெற்றவர் சுறுசுறுப்புடையவராய், கம்பீரத் தோற்றம் வாய்க்கப்பெற்றவராய், தைரியம் மிக்கவராய் விளங்குவர்.