பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} OG

3. அறநெறிச் சாரம்

ஆன்ற குணங்கள் மெய்ம்மை பொறையுடைமை மேன்மை தவமடக்கம் செம்மையொன் நின்மை துறவுடைமை-கன்மை

திறம்ப விரதம் தரித்தலொ டின்ன - அறம்புத்தும் ஆன்ற குணம்,

அறப்பயிர் செய்க இன்சொல் விளைநிலமா, ஈதலே வித்தாக, வன்சொல் களைகட்டு, வாய்மை எருவட்டி, அன்புநீர் பாய்ச்சி, அறக்கதிர் ஈனவோர் பைங்கூழ் சிறுகாலைச் செய்.

- கல்விச் செருக்கு வேண்டா “பலகற்ருேம் யாம்,' என்று தற்புகழ வேண்டா: அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்: சிலகற்ருர் கண்ணும் உளவாம். பலகற்ருர்க் கச்சாணி அன்னதோர் சொல்.

எல்லாவற்றிற்கும் தானே காரணம் தானே தனக்குப் பகைவனும் கட்டானும்: தானே தனக்கு மறுமையும் இம்மையும்; தானேதான் செய்த வினைப்பயன் துய்த்தலால், தானே தனக்குக் கரி.

4.

-முனைப்பாடியார்.

ஆசிரியர் வரலாறு :

முனைப்பாடியார் இற்றைக்கு ஏறக்குறைய இருநூற்றைம்பது ஆண்டுகட்கு முன், திருமுஃப்பாடி என்னும் ஊரில் சைவ சமயத்தில்

பிறந்தவர்.