பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

திகைப்புற்று, மெளனமாயிருந்தார்கள். ஒரு சிலர் இச் சொல்லாடலின் உட்பொருளை உணர அவாவுற்று, ஆசிரிய ாகிய பிள்ளையவர்களே நோக்கி, அன்பு மிக்க ஆசிரியப் பெருந்தகையீர், சிறிது நேரத்துக்கு முன் காவலர் கூறிய மொழிக்கு விடையாக மறுமொழி கூறினீர்களே! அது எங் களே மயங்கச் செய்கிறது. எனவே, உங்களுடைய கூற்றின் உண்மைப் பொருளை அறிய அவாவி நிற்கின்ருேம். அன்பு கூர்ந்து எங்களுக்கு உம் அமுதவாக்கின் உட்பொருளை எடுத்துக் கூறல் வேண்டும்." என்று இரிந்து வேண்டினர்.

9. உடனே பிள்ளையவர்கள், நாவலர் கூறியதும் மெய்ம்ம்ை. யான் கூறியதும் உண்மை. எவ்வாறெனில், பனிக்காலம் மிகக் கொடிது என்னும் நாவலர் கூற்றுக்கு குளிர் மிகுந்த காலம் மிகவும் கொடுமையானது என்பது பொருளாகும். பனிக்காலம் மிகவும் நல்லது என்னும் எனது தொடருக்குக் குளிர் மிகுந்த இக்காலத்தைவிட, ஆலம் (விஷம்) மிகவும் நல்லது, என்பது பொருளாகும். இதல்ை பனியின் கொடுமை மேலும் மிகுதியாகக் கூறப்பட வில்லையோ ஆகவே, எம் இருவர் கூற்றுக்களும் ஒரு பொருளையேயன்ருே விதந்து கூறுகின்றன?' என்றனர். இவைகளைச் செவியேற்றதும் அனைவரும் பிள்ளையவர்கள் அறிவுத்திறனை மேலும் கொண்டாடி அவரைப் போற்றினர் கள். பின்பு சின்னுட்கள் கழிந்ததும், பிள்ளையவர்கள் தம் மாளுக்கருடன் திருவாவடுதுறைக்கு மீண்டார். என்னே புலவர்களின் நுண்மதி ! -

அருஞ்சொற்பொருள் மண்டலாதிபர்கள் - அரசர்கள், ஐயம் - சந்தேகம், சான்று . சாட்சி,

தமிழ்-இனிமை, பேணிபோற்றி, புலமை-அறிவு, மீன்-நட்சத்திரம், குழு.கூட்டம், அக்கமணிமாலே இருந்திராட்சமாலை, ஏறு - காளி