பக்கம்:குயில்களும் இளவேனில்களும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டிருக்கும் நேரத்திலும், கிழட்டு ஓணான் விண்மீன் களின் அழகை வியப்போடு அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பதையும் தன் பாடலில் குறிப்பிடும்போது, அந்தப் பொறாமை தலைதுாக்கி நிற்கிறது. செயற்கைச் சொர்க்கத்தில் அடிக்கடி திளைத்திருந்தாலும், சாவைப் பற்றிய எண்ணமும் அவன் உள்ளத்தில் அடிக்கடி எழாமல் இல்லை. இரவு கட்டாயம் வரும்; மனிதனின் விருப்பு வெறுப்புகளைச் சாவின் அமைதி செயலற்றதாக்கிவிடும் ' என்று குறிப்பிடுகிறான்.

கவிஞர்களுக்குச் சில விநோதமான மன நிலைகள் சில நேரங்களில் ஏற்படுவதுண்டு. அந்த நேரங்களில் அவர்கள் சிந்தனைப் போக்கும் செயலும், மற்றவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாதபடி அமைந்திருக்கும். சிலசமயம் அவர்கள் சிந்தனையில் குறும்புத்தனமும் இருப்பதுண்டு. இத்தகைய சிந்தனைப் போ க் கு க ைள லார்காவிடம் நிறையக் காணலாம். ஊமைக் குழந்தை (The Dumb Child) grair so Liri di :

அந்தக் குழந்தை

தனது குரலைத் தேடிக் கொண்டிருக்கிறது. (சிள்வண்டுகளின் அரசன் அதை வைத்துக்கொண்டிருந்தான்.)

ஒரு நீர்த்துளியில் தனது குரலை அந்தக் குழந்தை தேடிக் கொண்டிருந்தது.

நான் - அந்தக் குரலால் பேச விரும்பவில்லை.

14.5