பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80|குயில் கூவிக்கொண்டிருக்கும் <!

பட்டுக் குழந்தைகள் எலைாம் கோயில் பக்கமே போக வில்லை. பகுத்தறிவுச் சிந்தனைக்குப் பக்குவப்படாத மக்களிடையில் பாவேந்தர் அன்று பேசிய துணிச்சலான பேச்சு மிகப்பெரிய புரட்சியாகும். இந்தக் கோனாப் பட்டுப் பேச்சு துடிப்பான செயல் திறமை மிக்க இளை ஞர் சிலரை இவர் எதிரில் கொண்டுவந்து நிறுத்தியது. அவர்களுள் பள்ளி ஆசிரியராகக் கோனாப்பட்டில் இருந்த கா. அப்பாதுரையும். முருகு சுப்பிரமணியமும் குறிப்பிடத் தக்கவர்கள். இந்த இருவரும் பன்மொழிப் புலவராகவும், பொன்னி ஆசிரியராகவும் எதிர்காலத் தில் வளர்ச்சியுற்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. எங் கள் இன்ப நிலையத்தில்தான் இச் செட்டிநாட்டு இளை ஞர்கள் துணையோடு முத்தமிழ் நிலையம்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது, பாவேந்தருடைய முத் தமிழையும் 'இன்ப இரவு' என்ற பெயரில் அது நாடக மாக அரங்கேற்றம் செய்தது.

1944ஆம் ஆண்டு பாவேந்தரின் மூத்தமகள் சரசுவதி யின் திருமண முயற்சிகள் நடைபெற்றன. இம்முயற்சி யில் எனக்கும் கணிசமான பங்கு உண்டு. மணமகன் கண்ணப்பர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புல வர் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தார்; சுயமாரி யாதை இயக்கத்திலும் ஈடுபாடு மிக்கவர். இவரைப் பற்றிக் கேள்விப்பட்ட நான் நேராகப் புதுவை சென்று பாவேந்தரைக் கலந்து கொண்டு சிதம்பரம் சென்றேன். அன்பழகன் அப்போது மாணவர் என்று எண்ணுகிறேன். அன்பழகன் வீட்டுக்குக் கண்ணப்பரை வரச்சொல்லி நேரில் பார்த்தேன்: அழகும் அடக்கமும் மிக்க இளைஞ ராக அவர் விளங்கினார். பார்த்தவுடன் அவரை எனக் குப்பிடித்து விட்டது. அவருடைய இசைவைக் கேட்டுக் கொண்டு பெண்பார்க்கும் அடுத்த கட்டத்துக்கு ஏற்பாடு செய்தேன். புதுவையில் பெண்பார்க்க நாளும் குறிக்கப்பட்டது. என் சுமையைச் (நகைகள்) சரசுவதியின் உடம்பில் ஏற்றி