பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$6 குயில்பாட்டு:ஒரு மதிப்பீடு பாடக் கேட்டு அநுபவித்தால் இவ்வுண்மையைத் தெளிய லாம். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான ஆயர் குலத்தைச் சேர்ந்த ஆனாயர் புல்லாங்குழலை இசைத்தே புண்ணியனார் திருவடியை அடைந்தார் என்று திருத் தொண்டர் புராணம் செப்புகின்றது. அவருடைய வேய்ங்குழ லோசையைக் கேட்டால் நிற்பனவும் சரிப்பனவும் என்ன ஆகும் என்பதைச் சேக்கிழார் வாய்மொழியால் கேட்டது பவிக்க வேண்டும்.** திருநீலகண்ட யாழ்ப்பாணர், பாண பத்திரர், திருப்பாணாழ்வார் இவர்கள் இசையினாலேயே எம்பெருமானைப் பாடிப் பரவி முத்தியடைந்த பெருமக்கள் என்பதை வரலாறு இசைக்கின்றது. ஆழ்வார் பாசுரங்களும் இசையை அடிப்படையாகக் கொண்டவை. எடுத்துக்காட்டாக முளைக்கதிரை (தி. நெ. தா. 14), மின்இலங்கு (தி. நெ. தா. 25) போன்ற திருநெடுந் தாண்டகப் பாசுரங்களை இசையேற்றிப் படித்தால்-பாடி னால்-தொல்லைப் பழவினையைமுதலோடுஅரிந்துவிடலாம். பாடும்போது உள்ளம் சோரும்; உகந்து எதிர்விம்மி உரோம கூபங்களாய்க் கண்ண நீர்கள் துள்ளம் சோரும் என்ற அநுபவத்தை உணரலாம். கண்ணன் சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச், செங்கண்வாய் கோடச் செய்யவாய் கொப்பளிப் பக் குறுவெயர்ப் புருவம் குடிலிப்பக், கோவிந்தம் குழல் கொடு ஊதினபோது நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பெரி யாழ்வார் மொழியில் கேட்டநுபவிக்க வேண்டும்." திருவாய் மொழியைச் சாமவேத சாரம் என்று கொள்வது வைணவ மரபு. இசைத் தமிழ்ப் பிரிவைச் சேர்ந்தது. பண்ஆர்தமிழ்” (திருவாய் 9, 8. 11), செயிர்இல் சொல் இசைமாலை” (திருவாய் 3, 2; 11), பண் ஆர் பாடல் இன்கவிகள்' 13. பெ. பு: ஆனாயர் புராணம், 30-35 14. பெரியாழ். திரு, 鰲