பக்கம்:குறட்செல்வம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

ஆதலால், மரணம் பற்றிக் கவலைப்படுவதை விடி வாழ்க்கையைப் பயனுடையதாக்கிக் கொள்ள வேண்டும் என்று கவலைப்பட்டு முயலுதலே. முறையான வாழ்க்கை. ஆதலால், எல்லோருடைய மரணம் பற்றியும் அழுதல் நெறியன்று. முறையாக வாழத் தெரியாதவன் மரணத் திற்கு ஆட்படுதல் மீண்டும் புதிய வாய்ப்பு கிடிைத்தற்கு ஏதுவாகும்.

ஆனால், இந்தப் பொதுவிதி நல்லோருக்கல்ல. அவர்கள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள், ஆதலால் மரண வாயிலில் அழமாட்டார்கள்; மாறாக மகிழ்வார்கள்.

ஆனால், இந்த நிலத்தியலின் வாழ்க்கைக்கு வித்தென விளங்கும் நல்லவரை இழப்பது குறித்து அழுவார்கள், நாம் சிரிக்க மற்றவர்கள் அழ, வாழ்க்கை முடியுமானால் அது வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்க்கையே! நாம் அழவும் மற்றவர்கள் சிரிக்கவும் வாழ்க்கை முடியுமானால் அஃது இரங்கத் தக்கது, இத்தகையோரின் மரணமும் வரவேற்கத் தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/138&oldid=1276476" இலிருந்து மீள்விக்கப்பட்டது