பக்கம்:குறட்செல்வம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

விழுமிய பயன். மொழியின் இந்த விழுமிய நோக்கத் தைக் ளெலப் போக்கில் தமிழர்கள் மறந்தார்கள்.

நாம் வேறொருவரோடு உறவுகொண்டு வாழ விரும்பி னால், அவரைப் புரிந்துகொள்ள வேண்டியதவசியம். புரிந்துகொண்டு பேசிப் பழகி வாழ்வதற்கு நம்மைத் தகுதிபடுத்திக்சகாள்ள வேண்டும். .

இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்தார்கள். ஆனால் சிங்களவர்களைப் புரிந்து கொண்டு பழக, இவர்கள் சிங்களத்தைப் படித்துக் கொள்ளவுமில்லை. அவர்கள் இவர்களைப் புரிந்துகொள்ள -பழக_அவர்கட்கு தமிழை கற்றுக் கொடுக்கவுமில்லை. இந்த நிலைமையில் மொழி அல்லது இனத்தினாலாய ஒற்றுமைகள் வளர்ந்து காலப் போக்கில் பகைமையாக மாறி உறவைக் கெடுத்து விட்டது. - -

நாம் எந்த நாட்டில் வாழுகிறோமோ, அத்த நாட்டை நம்முடைய நாடாக ஆக்கிகொள்ள முயல வேண்டும். அச்சாதனையை நாம் அடைவதற்காக அதற். குரிய வகையில் நமது கல்வியை அமைத்துக்கொள்ள வேண்டும்.

ஆங்கிலேயர்களும், ஆரியர்களும் எந்தெந்த நாடு கட்குச் சென்று வாணிகம் செய்தார்களோ அந்தந்த நாடு களின் மொழிகளைப் படித்துக்கொள்வதில் அக்கறை காட்டினார்கள். .

அதுபோலவே, ஆங்காங்குள்ள மக்கட்குத் தங்கள் மொழியை கற்றுக் கொடுப்பதிலும் அக்கறை காட்டி னார்கள். அதன் காரணமாகவே ஆங்கிலம் உலக மொழியாயிற்று. சமஸ்கிருதம் இந்திய மொழியாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/152&oldid=1276486" இலிருந்து மீள்விக்கப்பட்டது