பக்கம்:குறட்செல்வம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. பயனில சொல்லாமை


இன்றைய உலகியலில் பேச்சு அதிகம். மனிதர்கள் தம்முள் ஒருசிலர் கூடினாலும் பேசித் தீர்க்கிறார்கள். பலர் கூடினாலும் (கூட்டங்கள் என்ற பெயரில்). பேசித் தீர்க்கிறார்கள். ஆக, கடந்த நூற்றாண்டைவிட, இந்த நூற்றாண்டில் பேச்சு அதிகம். வீட்டிலும் அதிகம். நாட்டிலும் அதிகம். இங்ங்ணம் வளர்ந்துவரும் பேச்சு முறை ஆக்க வழிப்பட்டதாக-பெரும் பயன் தரத்தக்கதாக வளருமானால் அது பாராட்டுக்குரியதாகும்.

மனிதனிடத்தில் சொல்லாட்சி தோன்றியதே பொருளை உணர்த்துவதற்குத்தான்்! பொருள்வழிப் பயன் பெறுதலும், தருதலுமே சொல்லாட்சியின் நிறைவு இலட்சியம். மேலும், உள்ளத்து உணர்ச்சிகளை வெளிப் படையாகக் காட்டி உறவுமுறையை வளர்த்துக்கொள்ளலே சொல்லாட்சி. மனிதர்களுக்குள் வள்ர்கின்ற பகை, பிளவு உணர்ச்சிக்கும் பெரும்பாலும் காரணம் தகுதியில்லாதோர், சொற்களை, தகுதியில்லாத முறையில் கையாளுவதே யாம். - o - - -

இயற்கையமைப்பில் பல்வேறு தடைகளைக் கடந்து மனிதனின் வழிவழிப்பட்ட முயற்சியால் தோன்றும் சொற்கள் பயனற்றவைகளாக, போவதைப் பார்த்து, திருவள்ளுவர் வருந்துகிறார். சொல்லாட்சியும் உழைப் பின் விளைவே. இத்தகு மேம்பட்ட சொல்லாட்சி பெரும் பான்மையான மக்கள் வாழ்வில் அவர்கட்கும் பிறருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/78&oldid=1276378" இலிருந்து மீள்விக்கப்பட்டது