பக்கம்:குறட்செல்வம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸81

தன்னைத்தான்் காதலன் ஆயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால். -

என்பது திருவள்ளுவர் அருள்வாக்கு.

பிறருக்குத் தீங்கு செய்யும்போது - பிறருக்குத் துன்பம் உண்டாக்குவது போலத் தோன்றினாலும், அது பயன்விளையுங் காலத்துத் துன்பம் செய்தாருக்கும் துன்பம் தருதலின் தற்காத்துக் கொள்க என்ற கருத்து இங்கு பெறப்படுகிறது. -

நாம் பிறிதொருவருக்குத் தீங்கு செய்யத் திட்டம் தீட்டலாம் - பேசலாம் - திட்டபடி செய்யலாம். நம்மால் துன்பம் இழைக்கப் பெறுகிறவன் நம்முடைய துன்பத்தை அனுபவிக்கவும் செய்யலாம். அவன் திரும்பித் தீங்கு செய்யத் தெரியாதவனாக இருக்கலாம். செய்வதற்குரிய ஆற்றல் அற்றவனாகக்கூட இருக்கலாம்.

ஆனாலும் அறக்கடவுள் தீங்கு செய்தார்க்குத் தீங்கு செய்யத் திட்டமிடும்-சூழ்ந்து செய்யும் துன்பப்பட்டவன், பொறுப்பை அறக்கடவுள் எடுத்துக் கொள்ளும். பிறருக்குத் துன்பம் விளைவிக்காமல் - ஆனால், பிறர் இழைக்கும் துன்பத்தால் அவதியுறுபவன் கேடும் இழப்பும் இல்லா மலேயே நலம் பெறுகிறான். காரணம், அறக்கடவுள் அவனுக்குப் பாதுகாப்பாக இயங்குகிறது. அறக் கடவுளின் ஆற்றல் அளப்பரிது. ஆதலால், தீங்கிழைத்த வனை, அது துன்புறுத்தியே தீரும். இதனை,

மறந்தும் பிறன்கேடு சூழற்க, சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.

என்று திருக்குறள் வலியுறுத்துகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/83&oldid=1276379" இலிருந்து மீள்விக்கப்பட்டது