பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் -- 85 இப்போது மண்கலம் என்ற சொல்லை பார்ப்போம். மண்கலம் என்ற சொல்லை மாணவர்களும் மக்களும் எடுத்தாள்கிறபோது, எடுத்தெழுதுகிறபோது, மங்கலமாற்று. என்று கூறுவாரும் உண்டு. * , - மண்கலம் என்பது, உணவு சமைக்க உணவு உண்ணும் பாத்திரமாக அமைந்திருப்பது இன்றும் இருந்து வருவதுதான். இதில் உள்ள எதார்த்தமான ஒரு உண்மை என்னவென்றால், மண்குடத்தை மிகவும் எச்சரிக்கையாகப் பயன்படுத்த வேண்டும். - - கொஞ்சம் கை தவறினாலும், மண்கலம் உடைந்துவிடும். உடைந்தது ஒட்டாது. வாழ்வுக்கும் கிட்டாது. அதுபோலத்தான் மனையின் மாட்சி என்கிற மண்கலமும் போற்றிப் பாதுகாக்கும் வரை, சிறப்பாகப் பயன்படும். புகழ் தரும் மனைமாட்சி பயன்படுகிற மண்கலம் போல, கொஞ்சம் கை தவறிவிட்டாலும் சமுதாயத்தின் முன்னே கெளரவத்தில் சுக்கு நூறாகி விடும். உடைந்த மண்கலம் ஒன்று சேராது. அதுபோல இழிந்து போன மனைமாட்சியும் ஒன்றாகாது. நன்றாகாது. உருவாகாது. மனைமாட்சி என்ற மண்கலத்தை உருவாக்குகின்றவர்கள் அந்த வீட்டு ஆணும் பெண்ணும்தான். கணவனும் மனைவியும் என்கிற தலைவனும் தலைவியும்தான். மண்கலம் போல குடும்பம் அமைகிறபோது அதன் நன்கலம் போல நன்மக்கள் பேறு அமைகிறது என்கிறார். மண்பாண்டங்களைச் செய்கிற குயவன் ஒருவனைப் பார்த்து எப்படி நீங்கள் இப்படி விதவிதான பல்வேறு அமைப்புள்ள கலங்களை வனைகின்றீர்கள் என்று கேட்ட போது அவர் அளித்த பதில் வியப்புக்குரிய விந்தையாக அமைந்திருந்தது. r. * : * > . . . . . .