உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறளோவியம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றாய்! தோற்றாய்! தும்மினால் அருகிருப்போர் வாழ்த்துவர். து பழையகால வழக்கம். அந்த வழக்கத்தை வைத்து வள்ளுவர், காதலர்களை ஊடல் புரியமட்டும் விடவில்லை, ஊடல் தீர்ப்பதற்கும் அந்தப் பழக்கத்தைப் பயன் படுத்துகிறார். துப்புரச் சிவந்த வாயாள் தூய பஞ்சணையின் மீது ஒப்புறக் கணவனுடன் இருந்த காலை இடையே எழுந்தது ஊடல் என்னும் காதல் திருவிளையாடல்! ஒன்பது முத்தம் தருவேன் என்று எட்டு தந்து நிறுத்தினானோ : அல்லது அவள்தான் எட்டி நின்றுவிட்டாளோ? கட்டிக் கரும்பே என அழைத்துவிட்டு, சுவைக்காமல் தயங்குகிறானே என்று ஊடல் புரிந்தாளோ ? எண்ணி ஏன் ஒன்பது கேட்டாள்; எண்ணாமல் பெறுவதற்கு. ஏன் அஞ்சினாள் என்று அவன் தான் மடிவிட்டு எழுந் தானோ? எப்படியோ உல்லாசபுரியில் ஊடல் நிலவு உதயமாகிவிட்டது. சில வினாடிகள் அமைதி! காதலன் திடீரெனத் தும்மிவிட்டான். காதலியும், ஊடலை மறந்து “வாழ்க!" என்று வாழ்த்திவிட்டாள். 61 தோற்றாய்! தோற்றாய்!" என்று தோகையின் சிவந்த கன்னத்தைச் சிவக்கவைத்தான். அவளும் பின்னிக் கொண்டாள். 'தும்மல்' அவர்கள் ஊடலைத் தவிர்த்து விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறளோவியம்.pdf/14&oldid=1703065" இலிருந்து மீள்விக்கப்பட்டது