உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறளோவியம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சயனத்துச் சாயல்! வெள்ளிமணல் படுக்கையிலே அந்தப் புள்ளிமயில் படுத்திருந்தாள். அந்த சயனத்துச் சாயலை தூர இருந்து காண்கிறான் அவன். அந்த அழகுமிகும் காட்சியால் உள்ளத்தில் வெல்லப்பாகு தடவிட அவன் கண்களை வாழ்த்துகிறான். பாராட்டுகிறான். குளிர் மொண்டுவரும் தென்றலிலே கதகதப்பு உணர்ச்சி கலந்து வருவதாக அறிகிறான். சிறிது நேரம் சிலையானான். உணர்வு வந்து அசைந்தான் அப்போது அந்த நிலாப் பதுமைக் காணவில்லை. அவள் போய் விட்டாள். அவன் நெஞ்சு துடித்துக் கனத்துவிட்டது. ஐயோ ! ஏன் இந்த அழகியைப் பார்த்தோம், பார்க்காமலிருந் திருந்தால் இப்படிப் பதைக்கவேண்டிய அவசியமே வந்திருக்காதே என்று புலம்பினான். வேதனையை உண்டாக்கிய தன் கண்களை வசை பொழிந்து கண்டித்தான். வீடு சென்றான். தூக்கம் வரவில்லை. அவளை நினைத்து நினைத்து அழுதான். அப்போது அவனுக்கு ஒரு ஆறுதல் ஏற்பட்டது. "சும்மா இருந்த என்னை சுந்தரியின் நினைவால் வாடச் செய்யும் நோயை உண்டாக்கிய ஏ ! கண்களே- நீங்கள் தூக்கம் வராமல் அழுகிறீர்களே... அது எனக்கு மிக மகிழ்ச்சி ! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் தண்டனையை நன்றாக அனுபவியுங்கள்!" என்று முணு முணுத்தான்.அந்த முணுமுணுப்பை முத்தமிழ் வள்ளல் குறளார் எப்படி இரு வரிகளில் அமைத்திருக்கிறார் படியுங்கள் ! ஓ ஓ வினிதே யெமக்கிந் நோய் செய்தகண் டா அ மிதற்பட்டது "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறளோவியம்.pdf/18&oldid=1703069" இலிருந்து மீள்விக்கப்பட்டது