உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறளோவியம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 குறளோவியம் அத்தகைய இரு இளம் புறாக்களை, இதோ சந்திக்க விடுகிறார் பாருங்கள்! கொடி மலர் சூடினால்தான் கோதை கோபிப் பாளோ, என எண்ணி, அவன் கிளைகளில் மலர்ந்த பூக் களைச் சூடிக்கொண்டு வருகிறான். அப்போ தும், அவள், அவனைப் பார்த்து, 'நீர் யாரோ ஒருத்திக்கு உமது அழ கைக் காட்டுவதற்காக இதைச் சூடினீர்' என்று சினம் கொள்ளுகிறாள். "கோட்டுப் பூச்சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று து. கொஞ்சித் தாவி அணைத்திடும்போது தன் கோமள வல்லியின் முகத்தை அவன் சரியாகப் பார்த்திட இய லாது ஏனெனில் இருவர் முகமும் ஒட்டிக் கிடக்கும் வேளை அது! நான்கு கண்களுமே பார்வையற்றுப் போகும் நேரம்; அதனால் அவன் கண்டதில்லை; "அக்கால" முகத்தை! இப்போதோ, அவள் விலகி நின்று பேசுகி றாள். அதனால் அவன் அவள் முகத்தைக் கூர்ந்து கவ னிக்கிறான். கோபத்திலுங்கூட அவள் முகம் புது எழில் கொட்டுகிறது. சினத்தால் துடிக்கும் செவ்விதழ்களிலே, அவளையுமறியாமல் புன்னகை, மின்னலிடுகிறது! அந்தப் பொலிவை ரசிக்கிறான் புது இன்பம் காணுகிறான் காளை! கண் வழியே கள் பருகுகிறான்-வைத்த கண் ணைப் பெயர்த்தெடுக்க முடியாமல் தவிக்கிறான்-அவளோ ஊடலின் உச்சிக்குப் பயணம் போகிறாள். "என்னையே இப்படி உற்றுப் பார்க்கிறீர்களே; காரணம் என்ன? யாருடைய அழகோடு என்னை ஒப்பிட்டுப் பார்க்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறளோவியம்.pdf/34&oldid=1703083" இலிருந்து மீள்விக்கப்பட்டது