உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறளோவியம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்திரக் கோடுகள்! சேரன் வில்லோ புருவம்? வீரன் கணையோ விழி கள்? சிந்தைக்கு விருந்தோ இந்தக் காந்தச் சிலை ?- என்றெண்ணத் தோன்றும் இந்த எழுதாத சித்திரப் பெண்- ஏழடுக்கு மாளிகையில் எழில் காட்டும் கண்ணா டியின் எதிரேயும் இல்லை; இயற்கையின் அழகு மலிந்த அந்தி நேரத் தோட்டத்து நடுவிலேயும் இல்லை; அடுக் களையிலே அமர்ந்திருக்கிறாள். ஏன் ? கேள்வி குடையத் தான் செய்யும். அந்தப் பட்டு நிகர் பாவை தன் காதலனுக்குப் பிட்டு தயாரிக்கிறாள். உப்பிட்டு வளர்த்த பெற்றோர், அவளை மலருக்கு ஒப்பிட்டு அவனிடம் தந்தார்கள். அவனோ கொப்பிட்டு வளரும் பகை சாய்க்கக் கொடுவாள் ஏந்திச் சென்றான். அவள் கும்பிட்டுக் கேட்டும் அவன் இருந்தா னில்லை. நகர்ந்து ஒழிந்தன நாட்கள். அவளோ நெஞ்ச ஏடுகளைத் திருப்புகிறாள். நெடுஞ் சுவற்றிலேயுள்ள கோடுகளை எண்ணுகிறாள். பால் கணக்கு, தயிர்க் கணக்கு காட்டும் கோடல்ல அவை. அவளின் பற்றுக் கோடு, அவளை விட்டுப் பிரிந்திருக்கும் நாட்களின் கணக்கு! கோடுகளைப் பார்த்துப் பெருமூச்செறிகிறாள். இன்றுதான் வருவானே-இன்பம் தருவானோ இல்லையோ- இன்றிரவும் தொல்லையோ-என ஏங்குகிறாள். தாமரை மொட்டு நிகர் தனம் படைத்த பேரழகி, தான் சுட்டு தரும் பிட்டுண்ண பேரழகன் வரக்காணேனே எனத் துடிக்கிறாள். அதுமட்டுமா? அத்தான் தன்னைப் பிரிந்து எத்தனை நாட்களாயின என அறிவிக்கும் அந்தச் சித்தி ரக் கோடுகளைத் தொட்டுத் தொட்டு, எண்ணி எண்ணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறளோவியம்.pdf/39&oldid=1703089" இலிருந்து மீள்விக்கப்பட்டது