உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறளோவியம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் எனும் பொழில்! திருக்குறளாம் தேனமிழ்தம் வழங்கிய திருவள் ளுவர் ஒரு நாள் காட்டகத்துக் காட்சிகளை சுவைத்து வரப் புறப்பட்டார். தென்னவரின் தோள் போன்ற குன்றுகளும், தமிழ் மன்னவரின் குடைபோன்ற பெருந் தருக்களும் வளங் காட்டி வள்ளுவரை ஈர்த்தன. மான் கூட்டம்-புலி நடமாட்டம் அத்தனையும் கண்டார். தொலைவினிலே... குன்றிரண்டு உயிர்பெற்றெழுந்து நின்று உயிர் குடிக்கப் போராடும் நிகழ்ச்சிதனை உண் டார் விழியினாலே ! இரு-யானை இறப்புலகின் அழைப்புக்கு யார் பொருத்தம் என்பதற்குப்போட்டி வைத்துப் போராடும் தீ நிலையைத் தென் தலைவர் வியந்து நோக்கும் வேளை யிலே - திருக்குறள் தனிலே புதுக்குறள் இணைக்க பொன்னான வாய்ப் பொன்றை ஓர் மனிதன் தந்திட் டான். து யானைப் போரை-குன்றின் மீது இருந்தொருவன் கண்டதை இவர் கண்டார், அண்மையில் நெருங்க வொண்ணாய்ப் பெரும்போர் ! அதைக் குன்றின் மீது இருந்து காண்பவன் அதிர்ச்சி அடையவில்லை. காரணம் யானைகளுக்கு எட்டாத உச்சியிலே இருக்கிறான். அதனால் அச்சம் எழ நியாயமில்லை ! குன்றின்மீது நின்ற வள்ளுவர் அழைத்து வந்தார்-எங்கே? குறள் கோட் டைக்குள்ளே ! பொருட்பால் எனும் பொழிலுக் குள்ளே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறளோவியம்.pdf/46&oldid=1703096" இலிருந்து மீள்விக்கப்பட்டது