உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறளோவியம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு தக்கார்- தகவிலர் மனிதன் இயற்கையெய்தி விடுகிறான். மறைந்த அந்த மனிதனைப்பற்றி ஊரார் பேசிக்கொள் கிறார்கள். இறந்தவன் நல்லவனா கெட்டவனா என்று பிரச்சினை எழுகிறது. ஒருவன் இறந்தவனைப் பற்றித் தீர்ப்புகூற புதிய வழி கண்டுபிடிக்கிறான். "ஏன் இப்படி கஷ்டப் படுகிறீர்கள்? மறைந்தவன் எத்தகையோன் என்பதை அறிய அவனது மகனைப் பார்த்தால் தெரிகிறது- திருவள்ளுவரே கூறியிருக்கி றாரே : நடுநிலை உடையவரா நடுநிலை இல்லாதவரா என்பது அவர்களின் மக்களால் காணப்படும் என்று !” இதுபோல அவன் விளக்க முறைத்து அதற்காக குறியையும் கூறுகிறான். 61 • தக்கார் தகவிலர் என்பதவரவர் எச்சத்தாற் காணப்படும் இதுதான் அவன் ஆதாரங் காட்டிடும் குறள். எச்ச மென்றால் மக்கள் எனப் பொருள் கொண்டு, மக்களைப் பார்த்து,பண்பைப் புரிந்துகொள் என்று உரை கூறிய வர்கள் தவறான பாதையில் நடந்துவிட்ட காரணத்தால் மேற்கண்ட தீர்ப்பை வழங்க அவன் முன் வந்திருக் கிறான். அந்த உரையின்படி உலகத்தை நோக்கினால் குறளே பொய்த்துவிடும் போல் தோன்றுகிறது. எச்சமான காந்தியாரின் பெருமையை அவரது அப்துல்லா காந்தியைப் பார்த்து தெரிந்து கொண்டால் என்ன ஆவது? புராணக்கதை எழுதி யிருக்கிறார்களே ;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறளோவியம்.pdf/48&oldid=1703098" இலிருந்து மீள்விக்கப்பட்டது