பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு O 107

களையும் ஒரு பெண் செய்யத் தொடங்கினால், அதைவிட வேறு சிறப்பு இருத்தற்கில்லை. இத்தகைய ஒரு பெண்ணைக் காட்டிலும் வேண்டத்தக்க பொருள் வேறு இல்லை என்று கூடச் சொல்லலாம். ஆனாலும், வாழ்வுக்கு வழி வகுத்த குறள் இதனோடு நிறுத்தவில்லை. இன்னும் ஒரு படி மேலே சென்று, ‘இம்மூன்றையும் செய்பவள் பெண்; சோர்வு இல்லாமல், அதாவது ஒரு சிறிதும் தளர்ச்சி அடையாமல், விடாமல் இதனைச் செய்து கொண்டு இருப்பவளே பெண்ணாவாள்,” என்றும் கூறுகிறது.

இக்குறள் கண்ட வாழ்வை வாழ்ந்த மகளிர் உலகில் எல்லாவிடங்களிலும் உண்டு; சிறப்பாக இந்தியாவாகிய இத் துணைக் கண்டத்தில் மிகுதியும் உண்டு. மிகச் சிறப்பாக இத் தமிழ் நாட்டில் பண்டு தொடங்கி இன்றளவும் பற்பலர் உண்டு என்று கூறினால் அதில் தவறு ஒன்றும் இல்லை.

காவிரிப்பூம்பட்டினத்துக் கற்பரசி கண்ணகியும், மாதவி பெற்ற பெண் மணிமேகலையும், சோழன் மகளாராய்ப் பிறந்து, பாண்டியன் மனைவியாராய்ப் புகுந்த மங்கையர்க்குத் தனி அரசியாரும் ஒரு சில எடுத்துக் காட்டுக்கள் ஆவர். குறளில் சொல்லப்பட்ட மூன்று கடமைகளையும் இறுதிவரை ஒரு சிறிதும் சோர்வு கட்டாமல் காத்த பெருமை இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கண்ணகிக்கும், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மங்கையர்க்கரசியாருக்கும் உண்டு.

கணவனைப் பிரிந்த கண்ணகி, காவிரிப்பூம்பட்டினத் திலேயே கஷ்டத்தோடு உடன் பிறந்தவள். பெருங்குடி வணிகனின் பெருமடமகளாய்ப் பிறந்த காரணத்தால் அவள் துயரத்தைக் கண்டு உற்றார், உறவினர், தாய் தந்தையர் ஆகிய அனைவரும்- கட்டிய கணவன் நீங்கலாக அனைவருமே- அவள் துயரத்தைப் பங்கிட்டுக் கொண்டனர். நம் துயரத்தைப் பிறர் பங்கிடும் பொழுது,