பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு O 109

பேசினாள். “அவன் கள்வன் அல்லன். அவனைக் கள்வன் என்று சொல்லிய இம்மதுரை நகரம் தீயால் அழிக்கப் படும்!’ என்று கதிரவன் விடை பகர்ந்தான்.

கோவலனைக் கள்வன் என்று தவறாகப் பழி சூட்டிய அதே மதுரை நகரில் ஐந்து நூற்றாண்டுகள் கழித்து மங்கையர்க்கரசியார் என்ற ஒரு பெருமாட்டியார் தோன்றினார். அவருடைய கணவன் சரித்திரப் புகழ் வாய்ந்த நின்ற சீர் நெடுமாறன்’ என்ற பாண்டியன். அவன் சமண சமயத்திலே புகுந்து விட்டான். தமிழ் நாட்டு வீரங்குறையாத மங்கையர்க்குத் தனி அரசியார், கணவன் தவறான வழியில் புகுந்தான் என்பதற்காக மனம் உடைந்து விடாமல், அவன் வழிக்குத் தாமும் சென்று விடாமல், மெல்ல மெல்ல அவனைத் தம் வழிக்குக் கொண்டு வந்த வரலாற்றைத் தமிழ் உலகம் நன்கு. அறியும்.

பெண்களை மதிக்காமல், அவர்களுக்கு மோட்சம் இல்லை என்று சொல்லுகின்ற வேற்று நாட்டாரிடையே, மங்கையர்க்கரசியார், கண்ணகியைப் போலவே,

“ தன் காத்துத் தன் கொண்டான் பேணித் தகை சான்ற

சொல் காத்துச் சோர்விலாள் பெண்’

என்ற குறளுக்கு இலக்கியமாய் வாழ்ந்தார்.

இக்குறள் கண்ட வாழ்வை அவ்வக்காலத்தில் தமிழ், நாட்டு மகளிர் பலரும் மேற்கொள்ளுதலினால்தான், எத்தனையோ இனங்கள் இன்று இல்லாமல் அழிந்து விட்டாலும், இத்தமிழ் இனம் மட்டும் அழியாமல், நிலை. பெற்று நின்று வலுவோடு வாழ்ந்து வருகிறது.