பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு O 111

இவ்வாறு கவிதை கூறுவதைக் கண்ட பலரும், மிகுந்த வன்மையையும், அகன்ற நிலப் பரப்பையும் எடுத்துக் காட்டுகின்ற உபசார வழக்காக இதனை ஏற்றுக் கொண்டார்களே தவிர, விஞ்ஞான ரீதியில், பூகோள ரீதியில், சரித்திர ரீதியில் இது உண்மையா என்று யாரும் ஆராய முற்படவில்லை. இவ்வாறு உயர்வு நவிற்சி அணியில் சொல்வது தமிழ் நாட்டில் மட்டும், தமிழர் மட்டும் செய்கின்ற தவறு என்று யாரும் கருத வேண்டா. உலகத்திலுள்ள எந்த இலக்கியத்தை எடுத்துக் கொண் டாலும் அது இவ்வாறு பேசுவதைக் காணலாம். ஹோமரினுடைய பெருங்காப்பியமாகிய ஒ தேசிய'த்தி லிருந்து நம் காலத்துக் கவிஞராகிய பாரதியார் பாடிய “பாஞ்சாலி சபதம் வரையில், இவ்வியல்பைக் காண்டல் கூடும்.

இங்ங்னம் உயர்வு நவிற்சி அணியில் பாடுவது காப்பியங்களுக்கும் கவிதைக்கும் உரிய இயல்பே அன்றி, திருக்குறள் போன்ற நீதி நூலுக்கு இயல்பு அன்று. ஆனால், சில குறள்களைப் படிக்கும்பொழுது நம்மையும் அறியாமல், ‘இது முடியுமா?’ என்று கேட்கின்றோம். உண்மையை ஆராய்ந்து பார்த்தால், குறள் உண்மையை உள்ளவாறு எடுத்துச் சொல்கின்றதே தவிர, உயர்வு நவிற்சி அணியை அதிகம் கையாளவில்லை என்பது நன்கு விளங்கும்.

“வாய்மை என்றதோர் அதிகாரத்தை வள்ளுவர் பாடுகின்றார். பொய் பேசாது, உண்மை பேசுதலையே, நினைத்தலையே, வாய்மை என்று கூறுகிறோம். ஆனால் வாய்மையின் சிறப்பைக் கூறவந்த வள்ளுவர், ஏனைய பண்பாடுகளுக்கு இல்லாத ஒரு தனிச் சிறப்பை இதற்குத் தந்தார். வாய்மை பேசுகின்ற ஒருவனை உலகம் முழுவதும் போற்றும் என்று சொல்கிறார். இவ்வாறு சொல்லிவிட்டால் எத்தனையோ தடை விடைகளுக்கு இது காரணமாகலாம். வாயினால் சொல்கின்ற அளவில்