பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. கண்ணுக்கு அணிகலம்

கண்ணுக்கு அணிகலமாவது யாது? சந்தேகமென்ன? நல்ல அழகிய கரிய மைதான்,’ என்று பலரும் விடை கூறுவர். இன்னும் சொல்லப் போனால் படக் காட்சி களில் வரும் நங்கையர் கண்கள் எத்தனையோ விதமாகச் செயற்கை அழகு ஊட்டப்பட்டுள்ளன. அவை எல்லாம் கண்ணுக்கு அழகு செய்கின்றன என்று கருதித்தானே. இவ்வாறு செய்துள்ளார்கள்? எனவே, அவர்களும் அவ்வாறு நீட்டி, குறைத்து, மைதீட்டி, அழகு செய் வதையே கண்ணுக்கு அணிகலம் என்று கருதுகிறார்கள்.

ஒவியக் கலையில் மிகவும் புகழ் வாய்ந்த தமிழ் நாட்டின் பழைய ஓவியங்களை எடுத்துக்கொண்டால், கண்ணை எவ்வாறு அவர்கள் கருதினார்கள் என்பது நன்கு விளங்கும். இந்த ஒவியம் தோன்றுவதற்குப் பன்னூறு ஆண்டுகள் முன்னர்த் தோன்றிய கவிதைக் கலையிலுங் கூடக் கண் பல படியாக வருணிக்கப் பட்டுள்ளது. உலகத்தை ஈன்ற அன்னையாகிய தேவிக்கு அங்கயற்கண்ணி (மீனாட்சி) என்றே ஒரு பெயரைச் சூட்டி யுள்ளார்கள். அதாவது, கயல் மீன் போன்ற கண் ணினை உடையாள் என்ற பொருளில் இச்சொல் அமைக்கப் பட்டுள்ளது. ஆதலின், தேவியைக் கற்பனை செய்யும் பொழுது அவளுடைய கண்ணை எவ்வாறு இவர்கள். கண்டார்கள் என்பதை இது விளக்கி நிற்கின்றது.