பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு 0 125

என்று கூறுகிறார் வள்ளுவர். ஒப்புரவறிதல் என்ற சொல்லுக்கு ‘இல்லையென இ ர ந் து வந்தவர்கள் யாவர்க்கும் வரையாது கொடுக்கும் ஆற்றல் இல்லை யானாலும், தம்மளவிற்கும், தம் வருவாய்க்கும் ஏற்பத் தக்கார்க்குத் தக்கவற்றை அறிந்து கொடுத்தல்’ என்று பொருள் கூறுகிறார் மணக்குடவர்.

பாரியைப் போலவும், சீதக்காதியைப் போலவும் வரையாது வழங்கும் இயல்பு இல்லையானாலும், உலகிய லுக்கு ஏற்ப அறிந்து தன் நிலைமையையும் சீர்தூக்கி ஒருவன் வழங்க வேண்டும் என்பதைத்தான் ஒப்புரவு என்ற அதிகாரம் பேசுகிறது. ஒப்புரவு அறிகின்ற ஒருவனிட முள்ள செல்வம், ஊர் நடுவே உள்ள குளத்தில் நீர் நிரம்பியது போல ஆகும் என்றும், அனைவர்க்கும் பயன் படக்கூடிய நல்ல பழமரம் அனைவர்க்கும் பொதுவான ஊர்ப் பொது விடத்தில் பழுத்தது போல ஆகும் என்றும் உவமைகளுடன் குறள் இதனை விளக்கஞ் செய்கிறது.

ஒப்புரவு அறிந்து தன்மாட்டுள்ளதைப் பகிர்ந்து தருதல் பலவகைப்படும். உள்ளத்தில் ஒரு பங்கைத் தருவதிலிருந்து, தரும் அ ள ைவ மிகுதிப்படுத்திக் கொண்டே சென்று, ஏறத்தாழ முழுவதையுமே தந்துவிடுகின்ற பகுதி வரை, தருதல் என்பது பலவகைப். படும். சிலர் தம்மாட்டு உள்ள பொருளை, அதுவும் தமக்கு தேவையில்லாததாய் இருப்பின் அதனைத் தருவர். ஆனால், தமக்கு மிகவும் தேவையாக உள்ள பொருளைத் தருதல், தம்மிடம் இல்லாவிடினும் தேடிச் சென்று சம்பாதித்துத் தருதல் ஆகிய இரண்டும் ஒப்புரவு, அறிகின்றவர்களிலுங்கூடத் தலையானவர்கட்கே கூடும்.

இத்தகைய இயல்யு உடையவர்களைப் பெருந்தகை. கள் என்கிறது குறள். இவர்களிடம் செல்வம் இருக்குமே யானால், அனைவர்க்கும் அது பயன்படும். எந்த அளவு, பயன்படும் என்று கூற வந்த குறள், ஒர் அழகிய,