பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. சென்ற இடம் எல்லாம் சிறப்பு

சென்ற இடம் எல்லாம் சிறப்புப் பெறுபவர் யாவர்? செல்வம் உடையவர்கள் என்று கூசாமல் விடை கூறி விடலாம். பொருட்செல்வம் உடையவர்கள் எங்கே சென்றாலும் பலர் சூழச் செல்வதைக் காணலாம். புகை வண்டி நிலையங்களில் சில சமயங்களில் வண்டி புறப் பட்டுச் சென்ற பிறகு, கீழே ரோஜா இதழ்கள் இறைந்து கிடக்கக் காணலாம். யாரோ பிரமுகரை வழி அனுப்ப வந்தவர்கள் போட்ட மாலைகளிலிருந்து உதிர்ந்த மலர் களே அவை. நெருங்கிச் சென்று விசாரித்தால் பிரமுகர் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்

பல சமயங்களில் அந்தப் பிரமுகர் பெயரைக்கூட நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். கல்வியில் பெரியவ ராக அவர் இருப்பினும், மக்களுக்கு நலன பயக்கும் பணிகளில் பெரியவராக அவர் இருப்பினும், நம் போன்றவர் அறிந்துகொள்ள வாய்ப்பு உண்டு ஆனால், இவை இரண்டு துறைகளிலும் பெரியவராக இருப்ப வரைப் பிறர் சாதாரணமாக அறிந்திருப்பினும், இவ்வாறு கெளரவப்படுத்தும் வழக்கம் நம் நாட்டில் குறைவு, அவர்களைப் புகை வண்டி நிலையத்தில் வந்து சந்தித்து வழியனுப்பும் அளவிற்கு யாரும் முன் வருவதில்லை.

இன்றைய விஞ்ஞான உலகில் மிகப் பெரியவராய்: இருப்பவர்களுள் ஒருவரும், கணித உலக மேதைகளுள்