பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு O 139

விட்டது; நெருப்புக்கு அஞ்சி வெளி ஓடி வந்த ஊர். காவலர்களை எல்லாம் கொன்றுவிட்டது.

22 ஊர் காவலர்களை இங்ங்ணம் கொன்றதால் அடிகளார் உடனே சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்தி விட்டார். இந்தியா முழுவதிலும் இக்கொள்கை காட்டுத் தீப்போலப் பரவி, மக்கள் உணர்ச்சி பெறும் காலத்தில் அடிகள் இதனை நிறுத்தியதைப் பற்றிப் பலர் வருந்திக் குறை கூறினர். அவர் அனைவருக்கும் அடிகள் கூறிய விடை ஒன்றே ஒன்றுதான். ‘தீயவழியில் சென்று சிறந்த பயனைப் பெருவதாயினும் அப்பயன் விரும்பத் தகுந்த தன்று,’ என்பதே அவ்விடை.

அடிகள் தாம் மேற்கொள்ளும் வழி தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை எவ்வளவு தூரம் வலியுறுத்தினார் என்பதை லூயி பிஷர்’ என்ற ஆங்கி லேயர் தாம் எழுதிய ‘காந்தி’ என்ற நூலில் (பக்கம் 104) அழகாக எடுத்துக் கூறுகிறார். மேற்கொள்ளும் வழி யிலும் தூய்மை வேண்டும்’ என்று அடிகள் பெரிதும் வற்புறுத்தினார். அதன் பயனாக ஒரு பரந்த நோக்கமும், எல்லையற்ற பொறுமையும், சிறந்த நடுவு நிலைமையும் அவருக்குக் கிடைத்தன. வழி செம்மையாய் இருக்கின்ற வரையில் எதிர்காலத்தில் உறுதியாகப் பயன் விளையும் என்ற எண்ணத்தில் அவர் காத்துக் கொண்டிருக்கத் தயாராய் இருந்தார்.

லூயி பிஷர் காந்தியடிகளின் வாழ்வின் சாரத்தை இங்கே பேசியுள்ளார். இதே கருத்தை இரண்டு குறள்கள் அழகாக எடுத்துப் பேசுகின்றன.

‘ ஈன்றாள் பசி காண்பான் ஆயினும், செய்யற்க

சான்றோர் பழிக்கும் வினை’ ‘ அழக்கொண்ட எல்லாம் அழப்போம்; இழப்பினும்

பின்பயக்கும் கற்பா லவை.’ இக்குறள்கள் கண்ட வாழ்வின் அடிப்படையிலேதான். இன்று நம் நாடு விடுதலை பெற்று வாழ்கிறது.