பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு 0 141

இவ்வாறு நினைப்பதும் நியாயமானது என்றே அனுபவத். திலும் சில சமயங்களில் தெரிகின்றது. சிலர் வாய் திறந்து பேசினால் அதனுடைய பயனை உடனே அறிய முடியும். அதிலும் இவர்கள் நல்லது கூறினால் நடப்பது இயலாதது ஆயினும், அல்லது கூறினால் உடனே நடைபெற்றுவிடக் காணலாம்.

பிறர் வாழ்வைக் கண்டு பொறாதவர் பலர் உண்டு. என்றாலும், அப்பொறாமை மனத்துடன் பல்லிலும் (சொல்லிலும்) விஷம் உடைய சிலர் உண்டு. இவர்கள் வாய் திறந்து ஒன்றைக் கூறுவார்களாயின், அது. பெரும்பாலும் நடைபெற்றுவிடும். ஆனால், இத்தகைய வர்கள் நல்லது கூறுவதும் இல்லை; கூறினால், அது. நடப்பதும் இல்லை. இதன் எதிராக எப்பொழுதுமே இவர்கள் அல்லாததைத்தான் கூறுவார்கள். அதுவும் தப்பாமல் நடைபெறுவது உண்டு.

சொல்லில் விஷம் உடைய இவர்கள் பல்லில் விஷம் உடைய பாம்பிலும் கொடியவர்கள். எவ்வாறு எனில், பாம்பு, கடித்தால் ஒழிய ஊறு செய்யாது. இவர்களோ, பேச்சாலேயே ஊறு செய்து விடுவார்கள். பாம்பு துன்பஞ், செய்யும் பகைவரையே கடிக்கும். இவர்கள் வேறுபாடு. இன்றி அனைவருக்கும் தீங்கு செய்வர். இவர்களைவிடக் கொடியவரும் சிலர் உண்டு. இவர்கள் வாய் திறந்து பேசாமல் கண்ணால் பார்த்த மாத்திரத்திலேயே தீங்கு செய்து விடுவார்கள். இதனையே கண்ணேறு படுதல் என்று நம் முன்னோர் கூறினர்.

வாயால் கூறியும், கண்ணால் கண்டும் பிறருக்கு ஊறு. செய்யும் இதில், என்ன மாதிரியான தத்துவம் அடங்கி யுள்ளது என்று கூறுவதற்கு இல்லை. விஞ்ஞான முறையில் இதனை ஆராய்ந்து கண்டால் ஒருவேளை அர்த்தமற்று மூடநம்பிக்கை என்றுகூடச் சொல்லுவார்கள். ஆனால், நம்முடைய காரண காரிய ஆராய்ச்சிக்குள் இது அடங்குவ,